Published:Updated:

கோவை, பொள்ளாச்சி தி.மு.க.வுக்கு… சூலூர் அ.தி.மு.க.வுக்கு! - கோவை நிலவரம்

ஞா.சுதாகர்
எம்.புண்ணியமூர்த்தி
குருபிரசாத்
கோவை, பொள்ளாச்சி தி.மு.க.வுக்கு… சூலூர் அ.தி.மு.க.வுக்கு! - கோவை நிலவரம்
கோவை, பொள்ளாச்சி தி.மு.க.வுக்கு… சூலூர் அ.தி.மு.க.வுக்கு! - கோவை நிலவரம்

ந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதன்படி இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணியும், தமிழக அளவில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இரண்டாவதுசுற்று முடிவில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் 7,630 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

கோவை, பொள்ளாச்சி தி.மு.க.வுக்கு… சூலூர் அ.தி.மு.க.வுக்கு! - கோவை நிலவரம்

கோவை நாடாளுமன்றத் தொகுதி, (இரண்டாவது சுற்று)

சி.பி.எம்- பி.ஆர்.நடராஜன் - 25141

பி.ஜே.பி - சி.பி.ராதாகிருஷ்ணன் - 17511

நாம் தமிழர் - கல்யாண சுந்தரம்-  2352

அ.ம.மு.க -  அப்பாதுரை - 1680

ம.நீ.ம மகேந்திரன் -  5726

நோட்டா- 1006

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம் 24,344 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கோவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் ஆகிய இருவரும் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி, (நான்காவது சுற்று)

தி.மு.க - சண்முகசுந்தரம் - 1,05,433

அ.தி.மு.க - மகேந்திரன் - 81,089

மக்கள் நீதி மய்யம் - மூகாம்பிகை - 9,639

அ.ம.மு.க - முத்துக்குமார் - 5,839

நாம்தமிழர் - சனுஜா -  5,783

நோட்டா - 3,142

இதுவே கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியில், முடிவுகள் ஆளும்கட்சியான அ.தி.மு.க.விற்குச் சாதகமாக இருக்கின்றன. இரண்டாம் சுற்று முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமி 9579 வாக்குகள் பெற்று, 2480 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி 7099 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.