Published:Updated:

`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்

ரா.சதீஸ்குமார்
`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்
`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடைபெற்ற புலிகள் காப்பக அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியாமல் ஆவேசம் அடைந்தார்.

`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பயிற்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் டான் டீ அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.புலிகள் காப்பகம் குறித்த விவாத கூட்டத்தைக் கட்சி கூட்டம்போல மாற்றி ஆளும்கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தில் அமரச்செய்தார் அமைச்சர்.

`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கும்போதே அருகில் இருந்த அதிகாரிகளிடம், இது என்ன கூட்டம் எனக் கேட்டு சுதாரித்துக்கொண்டு பின்னர் பேசத் தொடங்கினார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிதிநிலை தொடங்கும் முன்னர், ஒவ்வொரு துறையிலும் ஆய்வு நடத்தப்படும். அந்தக் கூட்டம்தான் இது என்றார். தொடர்ந்து தமிழகத்தில் வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாக நீலகிரி உள்ளது. ஆனால், பல மாதங்களாக வனக் கால்நடை மருத்துவர்கள் இங்கு இல்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘அதற்குக் கால்நடை மருத்துவர்கள் இல்லையா சரி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்’ எனப் பதில் அளித்தார். 

`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்

பின்னர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது என்ற கேள்விக்கு, இது குறித்து புகார்கள் வரவில்லை என்றார். மேலும் முதுமலையில் பழங்குடி மக்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற அடுத்தடுத்த கேள்விகளுக்குக் கடுப்பாகி “நான் வனத்துறை அமைச்சர் நான் சொல்லுறத கேளுங்க. என்ன பிரச்னை இருக்குதுன்னு பெட்டிஷன் எழுதிக் கொடுங்க, சும்மா தாத்தாகிட்டே கொடுத்தேன், பாட்டிக்கிட்டே கொடுத்தேன்னு ரீல் விடாதிங்க” எனச் செய்தியாளர்களை பெட்டிஷன் எழுதித் தரச்சொல்லி ஆவேசம் அடைந்தார். இத்தனை ஆண்டுகள் வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அமைச்சருக்கு வனத்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

Vikatan