Published:Updated:

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு

எம்.குமரேசன்
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பகுதி கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை. கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி வெள்ளியங்கிரி மலை உள்ளது. இதன் அடிவாரத்தில்தான் ஈஷா யோகா மையம் உள்ளது. யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உண்டு. இந்நிலையில் அழகு நிறைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 4,000 வீடுகளைக் கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் முடிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு

நாட்டில் மழைப்பொழிவு குறைந்து வரும் நிலையில், வெள்ளியங்கிரி போன்ற அபூர்வ வகை மூலிகை மரங்கள் நிறைந்த மலைப் பகுதியின் அடிவாரத்தில் இது போன்று வீடுகளைக் கட்ட தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது இயற்கைக்குத் துரோகம் விளைவிக்கும் செயல் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 4,000 வீடுகள் கட்டுவதற்கு எவ்வளவு மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.  

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு

வெள்ளியங்கிரி மழை தொடர்ச்சியாக 7 மலைகளைக் கொண்டது. சுமார் 6,000 அடி உயரம் கொண்டது. இந்த மலையின் அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மலையின் உச்சியில் உள்ள சிவ லிங்கத்தைத் தரிசிக்க சித்ரா பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள். கோவை மாவட்டத்தில் சித்தர்கள் உலவும் பூமி இது. மலையில் ஏராளமான சித்தர்கள் தவம் செய்வதையும் பார்க்க முடியும். மலையில் ஏராளமான சுனைகளும் உள்ளன. வனவிலங்குகள் நிறைந்த பகுதி இது. முக்கியமாக யானைகளின் வழித்தடம். மலையில் சோலை மரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இளைஞர்கள் இந்த மலையில் ட்ரெக்கிங் மேற்கொள்வார்கள். கொங்கு மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலாத்தலம். அமைதியும் அழகும் நிறைந்த வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் வீடுகளைக் கட்ட தடை விதிக்கக் கோரி மலைவாழ் மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.