Published:Updated:

``நான் வீட்ட பாத்துக்குறேன்... நீங்க நாட்ட பாத்துக்கோங்க..!” - முகிலன் மனைவி பூங்கொடி

மு.பார்த்தசாரதி
``நான் வீட்ட பாத்துக்குறேன்... நீங்க நாட்ட பாத்துக்கோங்க..!” - முகிலன் மனைவி பூங்கொடி
``நான் வீட்ட பாத்துக்குறேன்... நீங்க நாட்ட பாத்துக்கோங்க..!” - முகிலன் மனைவி பூங்கொடி

மிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் வைத்து கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சி வணிக நோக்கில் சப்ளை செய்யப்படுவதை எதிர்த்துப் போராடியபோதுதான் அவர் கைது செய்யப்பட்டார். சரியாக ஒரு வருடம் கழித்து கண்டிஷன் பெயிலில் இன்று மாலை மதுரை சிறையிலிருந்து வெளியே வரும் அவரின் விடுதலை குறித்து மனைவி பூங்கொடியிடம் பேசினோம். 

``எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. நானும் அவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அப்போதே எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. நான் வீட்டைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் நாட்டைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று முன்பே சொல்லியிருந்தேன். உண்மைதானே, எல்லோரும் வீடு, குடும்பம் என்று இருந்தால் மக்களுடைய பிரச்னைகளை யார் பார்த்துக்கொள்வது. நம்மைச் சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் மக்கள்கிட்ட தெரியப்படுத்துறதுக்காகவாவது ஒருத்தர் வேணுமில்லையா. அவர் அதைச் சரியா செய்தார். அதற்காக அரசு அவருக்குச் சிறைத் தண்டனை கொடுத்திருந்தது. இன்று மாலை அவர் விடுதலை ஆகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், கண்டிஷன் பெயிலில் வெளியே வருவதால் வீட்டுக்கு எப்போ வருவார்னு தெரியலை. வந்ததும் இங்குள்ள தோழர்கள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வேன்” என்கிறார் மகிழ்ச்சியோடு.