Published:Updated:

`ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்குவதா?' - தண்ணீர் பிரச்னையில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

தினேஷ் ராமையா

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் தற்போது மக்களுக்கு அறிவுரை வழங்குவதால் என்ன பயன் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

`ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்குவதா?' - தண்ணீர் பிரச்னையில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சென்னை நகரில் குடிநீர் பிரச்னையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

அதன்படி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், அதன் தலைமைப் பொறியாளர் ஆறுமுகம் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில், `2017-ம் ஆண்டு பருவமழை பொய்த்து, சென்னை நகருக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டன. அதனால், சென்னை நகருக்கு வழங்கும் தினசரி தண்ணீரின் அளவை 830 மில்லியன் லிட்டரில் இருந்து கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 525 மில்லியன் லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

`ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்குவதா?' - தண்ணீர் பிரச்னையில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

மேலும், மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மூலம், தற்போது ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் 3,231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 26 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீராணம் ஏரியைப் பொறுத்தவரை 1,465 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவு கொண்டது. தற்போது, அதில், 569 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அங்கிருந்து, ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் நீர் சென்னையின் தேவைக்காக வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், தண்ணீர் லாரிகளைப் பொறுத்தவரை 900 லாரிகள், நாளொன்று 9,400 நடைகள் தற்போது தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது என்றும் குறுகிய சாலைகளில் செல்ல ஏதுவாக 2,000 முதல் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரிகள் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு ஒரு மில்லியன் லிட்டர் முதல் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் வரை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, புதிய ஆழ்துழைக் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள், ரூ.212 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்குவதா?' - தண்ணீர் பிரச்னையில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

இதுகுறித்த விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். `தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன. ஏரி, குளங்களை தூர்வாரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த  நடவடிக்கை என்ன. மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம், சோழவரம் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் மாற்று ஏற்பாடுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?' என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதேபோல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீர் வற்றி வருவது கடந்த ஆண்டே தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் மழை நீர் சேமிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் என்ன பலன் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். 

`ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்குவதா?' - தண்ணீர் பிரச்னையில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

தமிழக அரசு தரப்பில், பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர்த் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 270 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் 270 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளாதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், சோழவரம் ஏரி, ரூ. 38 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது எனவும் கடல் நீரைக் குடிநீராக்கும் மூன்றாவது யூனிட் செயல்படத் தொடங்கிவிட்டால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்குப் பருவமழையை எதிர்பார்க்கத் தேவையில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது. இதையடுத்து, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
 
Vikatan