Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ விசாரணையின் நிலை என்ன? - சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி

அருண் சின்னதுரை
தூத்துக்குடி துப்பாக்கிச்  சூடு சம்பவ விசாரணையின் நிலை என்ன? - சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ விசாரணையின் நிலை என்ன? - சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ., தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்.15ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்  சூடு சம்பவ விசாரணையின் நிலை என்ன? - சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த மனுவில்,``கடந்தாண்டு மே-22ம் தேதி நடைபெற்ற  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு, மாற்றியும் அதனை நான்கு மாதத்தில் முடிக்கவேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்டில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதனடிப்படையில்
 அக்டோபர் 8ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, அதனைக் கருத்தில்கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்  சூடு சம்பவ விசாரணையின் நிலை என்ன? - சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ., விசாரணை சம்பந்தமாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என உச்சநீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. ஆகையால் இந்த வழக்கிலும் விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது. எனவே, சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கே ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.