Published:Updated:

`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்?!' - நிர்வாகம் சொல்வதென்ன?

விகடன் விமர்சனக்குழு
`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்?!' - நிர்வாகம் சொல்வதென்ன?
`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்?!' - நிர்வாகம் சொல்வதென்ன?

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், `தண்ணீர் பிரச்னை காரணமாக கழிவறை மூடப்பட்டுள்ளது’ என்ற வாசகம் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்?!' - நிர்வாகம் சொல்வதென்ன?

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிலான தண்ணீர் பிரச்னையை சென்னைவாசிகள் சந்தித்துவருகின்றனர். `ஐ.டி கம்பெனிகளும் வணிக நிறுவனங்களும், தங்கும் விடுதிகளும்’தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் நாளுக்கு நாள் திணறிவருகின்றன. இந்நிலையில், சென்னை பரங்கி மலை மெட்ரோ ஸ்டேஷனில் `தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறை மூடப்பட்டுள்ளது’ என்ற வாசகம் அடங்கிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்?!' - நிர்வாகம் சொல்வதென்ன?

சென்னையில் மட்டும் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தத் தண்ணீர் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தால் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் நிலவும் நீர் பற்றாக்குறையால், 5 ஆயிரம் லிட்டம் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷனைத் தொடர்ந்து, மற்ற ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்றும் தகவல் வெளியானது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் பேசினோம்.

`தண்ணீர் பற்றாக்குறையில் மெட்ரோ ரயில் நிலையங்கள்?!' - நிர்வாகம் சொல்வதென்ன?

``அப்படி எதுவும் இப்போது இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மெட்ரோ ஊழியர்கள் சிலர்தான் அறிவிப்புப் பலகையை வைத்து இவ்வாறு தவறான தகவலைப் பரப்பியிருக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது தண்ணீர் பிரச்னை எதுவும் இல்லை. அதனால்தான், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஏ.சியை நிறுத்திவிட்டோம். ஏ.சி இயந்திரங்கள் செயல்பாட்டில் இருக்கும்போது, அண்டர் கிரவுண்டு ஸ்டேஷன் ஒன்றுக்கு ஒருநாளைக்கு 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. அதில் ஏ.சி-க்கு மட்டும் 7 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. இதை கணக்கில்கொண்டு, 19 மெட்ரோ ஸ்டேஷன்களிலும் ஏ.சியை குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்திவைத்துவிடுகிறோம். இதனால் நீரை சேமிக்க முடிகிறது. அதன்படி, அடிப்படைத் தேவைகளுக்கான தண்ணீரை சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திடம் வாங்கிப் பயன்படுத்திவருகிறோம். அதனால், தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறைகளை மூடிவிட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை'' என்றார். 

அதேநேரம், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கழிவறை மூடப்பட்ட தகவல் சமூக வலைதளங்கள்மூலம் வெளியான நிலையில், அதை மறைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முயற்சி செய்வதாகவும்  குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Vikatan