Published:Updated:

`சாதியை வைத்து அவதூறு பேசினால் கைது!’ - ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

எம்.கணேஷ்
`சாதியை வைத்து அவதூறு பேசினால் கைது!’ - ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை
`சாதியை வைத்து அவதூறு பேசினால் கைது!’ - ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

`சாதியை வைத்துத் தனி நபர் அவதூறாகப் பேசினால், அவர் கைது செய்யப்படுவார்’ எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

`சாதியை வைத்து அவதூறு பேசினால் கைது!’ - ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

நான்கு வருடத்திற்குப் பிறகு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று சாரல் விழாவில் நடைபெற்றது. இன்றும் நாளையும் நடக்கும் சாரல் விழாவில் தேனி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும் நாளையும் அருவியில் குளிக்கக் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரல் விழா தொடக்க நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவைத் துவக்கி வைத்தார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "எந்த ஒரு தனிநபரும் சாதியை வைத்து அவதூறாகப் பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தினகரன் தங்களைப் பசுத் தோல் போர்த்திய புலி என்று விமர்சித்துள்ளாரே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அவர் பேசியதில் இருந்தே அவர் குணம் தெரிகின்றது." என்று பதிலளித்தார். தொடர்ந்து, ஹெச்.ராஜா அவதூறாகப் பேசி வருகிறார்; அவரைக் கைது செய்வதற்குச் சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கேட்டதற்கு, "சாத்தியக்கூறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.