Published:Updated:

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது?

அ.சையது அபுதாஹிர்
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது?
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது?

அக்டோபர் மாதம் 8-ம் தேதி அன்று, தமி்ழக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத்தில், ஆளும் கட்சியான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் மனு அளித்தனர். இது, கட்சியின் கட்டுபாட்டை மீறிய செயல் என்றும், கட்சிக் கொறடாவின் உத்தரவின்றி செயல்பட்டதாகக் கூறி, 18 பேரையும் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் ஆணையிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றவாது நீதிபதி சத்யநாராயணனிடம் வழக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியும் வழக்கு விசாரணையை ஒரு மாதத்துக்கு முன்பே முடித்துவிட்டார். ஆனால் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் அக்டோபர் மாதம் 8-ம் தேதி அன்று வரும் என்ற தகவல் உயர் நீதிமன்ற வட்டாரங்களில் கசிய ஆரம்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஆட்சிக்கு விடுக்கப்படும் சவாலாக இருப்பதால், ஆளும் தரப்பும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.