Published:Updated:

`வேதாந்தா எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது' - ஓ.பி.எஸ் காட்டம்!

மலையரசு
`வேதாந்தா எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது' - ஓ.பி.எஸ் காட்டம்!
`வேதாந்தா எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது' - ஓ.பி.எஸ் காட்டம்!

``வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது'' எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க 6 நிறுவனங்களுடன் மத்திய அரசு நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் தமிழகத்தின் காவிரி படுகையில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவுள்ளது. இதில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சிதம்பரம் பகுதியும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதுக்குப் பிறகு வேதாந்தா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது சர்ச்சை வெடித்தது. ஏற்கெனவே, டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அரசு மீண்டும் இந்த இரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ``வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது. வேதாந்தா நிறுவனம் ஆளுமை செலுத்த முயற்சிப்பதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும். தமிழக மக்களுக்கு விரோதமான, தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.