Published:Updated:

அ.தி.மு.க-வின் கனவும்... தி.மு.க-வின் கணக்கும்! - வேலூர் மாவட்டத் தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம்!

லோகேஸ்வரன்.கோ

எப்படியாவது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் கனவு. எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் கணக்காக இருக்கிறது. 

அ.தி.மு.க-வின் கனவும்... தி.மு.க-வின் கணக்கும்! - வேலூர் மாவட்டத் தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம்!
அ.தி.மு.க-வின் கனவும்... தி.மு.க-வின் கணக்கும்! - வேலூர் மாவட்டத் தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம்!

திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்ற அ.தி.மு.க மற்றும் தி.மு.க வியூகம் அமைத்து வருகிறது.

மறைந்த முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், காலியாக உள்ள 19 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் `பரபரப்பு’ தொற்றிக்கொண்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வினர் `பூத்’ கமிட்டிகளை அமைத்து, தேர்தல் பணிகளைத் `தீ'யாகத் தொடங்கிவருகின்றனர். வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய மூன்று தொகுதிகள் இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன. 13 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாவட்டம் ஆரம்பகாலத்தில் தி.மு.க-வின் கோட்டையாகப் பார்க்கப்பட்டது. பின்னர் தலைகீழாக மாறியது.

இந்த மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க ஏழு தொகுதிகளையும், தி.மு.க ஆறு தொகுதிகளையும் கைப்பற்றின. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், அமைச்சர் கே.சி.வீரமணி ஆகிய இருவரும்தான் இந்த மாவட்டத்தைக் கைக்குள் வைத்திருப்பவர்கள். இவர்களை மீறி இங்கு எதுவும் நடக்காது. காலியாக உள்ள மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க-வினருக்கு பல அசைமென்ட்களை துரைமுருகனும், வீரமணியும் கொடுத்துவருகின்றனர். எப்படியாவது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் கனவு. எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் கணக்காக இருக்கிறது. 

இந்த நிலையில், மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க நியமித்துவிட்டது. ஆம்பூர் தொகுதிக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோஃபர் கபில் ஆகியோரும், குடியாத்தத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும், சோளிங்கருக்கு அமைச்சர்கள் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோரும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வாக்குகளைச் சாதிவாரியாகக் கைப்பற்ற அ.தி.மு.க. திட்டம் வகுத்துள்ளது. ஆம்பூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களைக் கவர, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, அமைச்சர் வீரமணி மற்றும் இஸ்லாமிய அமைச்சரான நிலோஃபர் கபில் கைகோத்து களமிறங்கியுள்ளனர். குடியாத்தம் `தனி’ தொகுதி என்றாலும் முதலியார் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். இச்சமூக வாக்குகளைக் குறிவைத்து முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பட்டியலினச் சமுதாய மக்களின் வாக்குகளைக் கவர பட்டியலின சமூக எம்.எல்.ஏ-க்களான அரக்கோணம் சு.ரவி, கே.வி.குப்பம் லோகநாதன் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர். சோளிங்கர் தொகுதியில் வன்னியர் மற்றும் ரெட்டியார் சமுதாய மக்கள் கணிசமாக இருப்பதால் அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முகாமிட்டு வாக்காளர்களை `கேன்வாஷ்’ செய்துவருகின்றனர்.

தீபாவளி முடிந்த மறுநாளிலிருந்து மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள், இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். அதில், சில தீர்க்கமான கட்டளைகள் அ.தி.மு.க-வினருக்குக் கண்டிப்போடு சொல்லப்பட்டது. குறிப்பாக, ``தி.மு.க-வில் உறவினர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை வெறுத்து குடும்பத்தைவிட்டே விலக்கிவையுங்கள். நமக்குக் கட்சிதான் முக்கியம். கிராமம்தோறும் இரட்டை இலைச் சின்னம் வரைய சுவர் பிடியுங்கள். எங்குப் பார்த்தாலும் இரட்டை இலையாகத் தெரியவேண்டும். சின்னத்தைப் பார்க்கும் மக்கள் வேட்பாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்கள்’’ என்று அமைச்சர்கள் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க-வினரின், `சின்னம்... இடம்...’ என்ற வார்த்தைகள் தி.மு.க-வினரின் காதுக்குச் சென்றது. உடனடியாக ஓவியம் வரையக்கூடியவர்களைத் தேடிப்பிடித்துச் சுவர்களில் `உதயசூரியன்’ சின்னம் வரைவதில் தி.மு.க-வினர் முந்திக்கொண்டனர். மூன்று தொகுதிகளிலும் பெரும்பாலான சுவர்களை, `உதயசூரியன்’ கவ்வியது. இதையறிந்த அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் கடுப்பாகித் தொண்டர்களைக் கடிந்துகொட்டினர்.

அதன்பிறகே, அ.தி.மு.க-வினரும் பெயின்ட் டப்பாக்களைத் தூக்கிக்கொண்டு `இரட்டை இலை’ச் சின்னம் வரைய கிளம்பினர். அ.தி.மு.க-வினருக்குப் போதுமான சுவர்கள் கிடைக்காததால், வீட்டுத் திண்ணையில் வரைந்ததோடு நிற்காமல், ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் சிலேட்களில் சின்னம் வரைந்தும், ஆங்காங்கே மரம், செடி, கொடிகளில் இரட்டை இலையை வரைந்தும் தொங்கவிட்டுள்ளனர். 

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இரு திராவிடக் கட்சிகளும் கவனம் செலுத்திவரும் வேளையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம்வகிக்கும் காங்கிரஸுக்கு சோளிங்கர் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில், ``டாலர் சிட்டியான ஆம்பூர், குட்டி சிவகாசியான குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளையும் கூட்டணிக்கு ஒதுக்க தி.மு.க-வுக்கு மனமில்லை" என்று பேச்சும் வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரவலாக அடிபடுகிறது.

அ.தி.மு.க-வின் கனவு பலிக்குமா என்பதும், தி.மு.க-வின் கணக்கு சரியாக இருக்குமா என்பதும் வாக்காளர்களின் கைகளிலேயே