Published:Updated:

`ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்!' - டிடிவி தினகரன்

மலையரசு
`ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்!' - டிடிவி தினகரன்
`ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்!' - டிடிவி தினகரன்

``அ.ம.மு.க-வின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்'' என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

`ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்!' - டிடிவி தினகரன்

மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க ஒவ்வொரு தொகுதியிலும் டெபாசிட் கிடைக்குமா என்ற அளவில் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவடைய உள்ள நிலையில், அ.ம.மு.க எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில்கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை. இதேபோல் சில இடங்களில் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளைவிட பின் தங்கியுள்ளது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

`ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்!' - டிடிவி தினகரன்

இதற்கிடையே, இந்தத் தோல்வி குறித்து டி.டி.வி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த உடன்பிறப்புகளுக்கும்,  கட்சிக்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப்போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அ.ம.மு.க-வின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.