Published:Updated:

`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!

கலிலுல்லா.ச
`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!
`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!
`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைக் கைப்பற்றும் என்று நினைத்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு டஃப் கொடுத்த அளவுக்கு 22 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மீண்டும் எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்று எண்ணிய தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் கனவுகள் தகர்ந்தன. 500-க்கும் மேற்பட்ட பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது பெரும்பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. `ஏங்க என்னோட பூத் ஏஜென்டே ஓட்டுபோடலனு சொல்ல வறீங்களா?. முறைகேடு நடந்துருக்கு’ என்று ஆணித்தரமாகக் கூறினார் டி.டி.வி. தினகரன்.

`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!

மேலும், கட்சியினருக்கு அவர் ஒரு சாய்ஸையும் கொடுத்தார். கட்சியிலிருந்து யார் வெளியேறுவதாக இருந்தாலும் வெளியேறலாம் என்றார். `இடைத்தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, அ.தி.மு.க அரசின் ஆட்சிக்கட்டிலை அசைத்துப் பார்த்துவிடலாம், ஆட்சியைக் கலைப்பதில் அ.ம.மு.க-வின் பங்கு இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சமீபத்தில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ரத்தனசபாபதி, கலைச்செல்வன், பிரபு உள்ளிட்டோர் தேர்தல் முடிவுகளைக் கவனித்துள்ளனர். எடப்பாடி பக்கம் இருப்பதே இப்போதைக்கு நல்லது என்று எண்ணுகிறார்கள். அதேபோல, தேர்தல் முடிவுகள் கட்சிக்காரர்களிடம்கூட சலசலப்பு நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக... தினகரன், தஞ்சையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கசாமி திருமணத்துக்குச்சென்றுள்ளார். அவர் எப்போது தஞ்சை சென்றாலும் அவருடன் தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருவது வழக்கம்.

`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!

ஆனால், தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அவர்கள் யாரும் வரவில்லை.  இப்படிப்பட்ட நிலையில்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவைச் சந்தித்துள்ளார் தினகரன். இது தொடர்பாக விசாரித்தபோது, `` மக்களவைத்தேர்தல் தோல்விக்குப்பிறகு சசிகலாவை சந்தித்தார் தினகரன்.  ஆனால் சசிகலா அப்செட்டில் இருந்திருக்கிறார். எப்படி தோற்றோம்..? என கேட்டிருக்கிறார். `இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுப்பாக்கல. தேனியில எப்படியும் தங்க தமிழ்செல்வன், பெரம்பூர்ல வெற்றிவேல், மக்களுக்கு பரிச்சயமானவர்கள் எப்படியும் ஜெயிச்சுடுவாங்கனுதான் நினைச்சோம்.

இதுல தேர்தல் ஆணையத்தோட சேர்ந்து அ.தி.மு.க கேம் பிளே பண்ணியிருக்கு. நம்மள ஜெயிக்கவிட்டோம்னா ஆட்சிக்கு ஆபத்து வந்துடும்னு இப்படிப் பண்ணிருக்காங்க. பூத்ல நம்ம ஏஜென்ட் ஓட்டுகூட பதிவாகலன்னு சொல்றாங்க. பூத் ஏஜென்ட் குடும்பம் இருக்கு. நம்மாளுங்க இருக்காங்க. இப்படி யாருமேவா ஓட்டு போடாம இருப்பாங்க' என்று விளக்கியிருக்கிறார்கள்.

`பதுங்கிப் பாயவேண்டிய நேரமிது!’ - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அட்வைஸ்!

தொடர்ந்து சசிகலா, `இந்தத் தேர்தல்ல மக்கள் நம்மல ஏத்துக்கல அப்படிங்கிற பிம்பத்த உருவாக்கப் பாக்குறாங்க. கொஞ்சம் அமைதியா இருப்போம். அடுத்தகட்டமா என்ன பண்ணலாம்னு யோசிப்போம். இப்போது எதுவும் அவசரப்பட வேண்டாம்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். அ.ம.மு.க-வின் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கியிருக்கிறார் சசிகலா.  தினகரன் சசிகலாவை சந்திக்கும்போது, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, இம்முறை அவருடன் செல்லவில்லை என்கிறார்கள். கடந்த சில நாள்களாகவே புகழேந்தி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

Vikatan