Published:Updated:

நள்ளிரவில் புகுந்த கொள்ளையன்... முதலில் கேமரா உடைப்பு! - ஏ.டி.எம்மில் நடந்த 5 நிமிட களேபரம்

நவீன் இளங்கோவன்

ஈரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்மில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் மெஷினை உடைத்து பணத்தைத் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு - கரூர் சாலையில் அமைந்திருக்கிறது மூலப்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை. இந்த வங்கியையொட்டி 10 அடி தூரத்திலேயே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியினுடைய ஏ.டி.எம் ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ஹெல்மெட் அணிந்தபடி இந்த ஏ.டி.எம்முக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே கையில் கொண்டு வந்திருந்த கம்பி மூலமாக, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியை உடைத்தெடுத்திருக்கிறார். இருந்தும் ஏ.டி.எம்மினுள் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5 நிமிடங்களாக ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை எடுக்கும் முயற்சி தோல்வியடையவே, ‘இனிமே இங்க இருந்தா சிக்கிக்குவோம்’ எனப் பதறிப்போன அந்த மர்மநபர் ஏ.டி.எம்மில் இருந்து தப்பி ஓடியிருக்கிறார்.

நள்ளிரவில் புகுந்த கொள்ளையன்... முதலில் கேமரா உடைப்பு! - ஏ.டி.எம்மில் நடந்த 5 நிமிட களேபரம்

சம்பவம் நடந்த இந்த ஏ.டி.எம்மில் சுமார் ஏழு லட்ச ரூபாய் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளையடிக்க வந்த மர்மநபர் ஹெல்மெட் அணிந்து வந்திருந்ததால், அவரது அடையாளங்கள் எதுவும் எ.டி.எம் மையத்துக்குள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைப் போலவே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈரோடு வ.உ.சி பூங்கா பின்புறம் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்மிலும் கொள்ளை முயற்சி நடந்தது. அதிலும் இதைப்போலவே, இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முடியாமல் மர்மநபர்கள் தப்பித்து ஓடினர். தொடர்ந்து மறுபடியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்மிலேயே ஏன் கொள்ளை முயற்சி அரங்கேறி வருகிறது என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Vikatan