Published:Updated:

`காந்தி குறித்த பேச்சு' - திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

விகடன் விமர்சனக்குழு
`காந்தி குறித்த பேச்சு' - திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!
`காந்தி குறித்த பேச்சு' - திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் மீது சென்னை அசோக்நகர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

`காந்தி குறித்த பேச்சு' - திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், `இந்தியாவின் முதல் இந்துத் தீவிரவாதி கோட்சே’ என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு அமைப்பினரும் இதற்குக் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கமல் மீது வழக்கும் பதிவு செய்யபட்டது. இதற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார். கடந்த மே18-ம் தேதி சென்னை அசோக்நகரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கல் 10-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருமாவளவன் கலந்துகொண்டார்.

`காந்தி குறித்த பேச்சு' - திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

அப்போது அவர், ``பா.ஜனதாவின் சனாதனக் கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால்தான், நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும். காந்தியும் ஒரு இந்து தீவிரவாதிதான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதிதான். காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி" என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்து மக்கள் முன்னணி சார்பில் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.