Published:Updated:

`கோட்டையிலிருந்து சென்ற போன்கால்!'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

விஷ்ணுராஜ் சௌ
ந.பொன்குமரகுருபரன்
`கோட்டையிலிருந்து சென்ற போன்கால்!'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?
`கோட்டையிலிருந்து சென்ற போன்கால்!'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

மிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த அக்டோபர் 2016-ம் ஆண்டோடு முடிவடைந்தது. ஆனால், 2016-ம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக ஒதுக்கப்படவில்லை. இதை எதிர்த்து தி.மு.க சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்து அடுத்த ஆறு மாத காலத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தனர். ஆனால், தேர்தல் நடத்தாதது தொடர்பாக பலரும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுத்து வந்த நிலையில், ஒவ்வொரு முறையும் தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் வாங்கி வந்ததே தவிர தேர்தலை நடத்தியபாடில்லை. ஆனால், சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியிருந்தன.

`கோட்டையிலிருந்து சென்ற போன்கால்!'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த தேர்தல் இப்போதாவது நடைபெறுமா என்பதில் மீண்டும்  சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், `` அ.தி.மு.க உள்ளாட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கு வேலைகளில் இறங்கியுள்ளது. ஏனெனில் பி.ஜே.பி, அ.தி.மு.க உடனான கூட்டணியைத் தொடர்வதில் பெரிய அளவில் விருப்பம் இல்லாமல்தான் உள்ளது. சமீபத்தில்கூட கூட்டணிக் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் ‘ கூட்டணி இதோடு முடிந்து விட்டால் நல்லதுதான்’ என்பதுபோல பேசியுள்ளார். இந்த நிலையில், தங்களுடையக் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்பதற்கான முயற்சிகளில் பி.ஜே.பி ஈடுபட்டு வருகிறது. பி.ஜே.பி ஒருவேளை தனித்துச் சென்றால், இப்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் உள்ள பா.ம.க, புதிய தமிழகம் உள்ளிட்டகட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள். இவை அ.தி.மு.க-வின் பலத்துக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள அ.தி.மு.க-வுக்கு உள்ளாட்சித் தேர்தல் தோல்வி ஏற்பட்டால் அது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

`கோட்டையிலிருந்து சென்ற போன்கால்!'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரனும் உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்தி கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தினகரன் ஆட்சியைத் தீர்மானிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய சக்தியில்லை என்றாலும், உள்ளாட்சிகள் அளவில் அ.ம.மு.க-வின் வளர்ச்சி நிச்சயம் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

`கோட்டையிலிருந்து சென்ற போன்கால்!'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்றுள்ள வளர்ச்சியால் அவர்களுக்கான ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதில் பெருவாரியான மாநகராட்சிகளை  தி.மு.க கைப்பற்றும் பட்சத்தில் அது ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்தக் காரணிகளை கவனத்தில் கொண்டு தற்போது உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட அ.தி.மு.க தலைமை முடிவெடுத்திருக்கிறது. இதற்காக இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல்வர் அலுவலகங்களிலிருந்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கும்படியான பேச்சு வழியிலான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்றுள்ளது. இதனால் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்தான பணிகள் முடங்கியுள்ளன“ என்றனர்.

Vikatan