Published:Updated:

`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்!"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு

மலையரசு
`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்!"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு
`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்!"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு

பிரதமர் மோடி முன்மொழிய 17-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற பிர்லாவை ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எம்.பி-க்கள் வரவேற்றுப் பேசினர். அ.தி.மு.க சார்பில் ஒற்றை எம்.பி-யாக சென்றுள்ள ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் ஓம் பிர்லாவை வரவேற்றுப் பேசினார். 2.10 நிமிடத்திலான தனது கன்னி பேச்சை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ....

`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்!"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு

``தேனி நாடாளுமன்ற உறுப்பினராக நான் வருவதற்குக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க தலைவர்களின் சார்பில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள். நான் இந்த அவைக்குப் புதியவன்தான் என்றாலும், உங்களைப் போன்ற சீனியர்களின் வழிகாட்டுதலால் என்னால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். தமிழ்நாடு எப்போதும் ஒரு முற்போக்கான மாநிலமாக இருந்து வருகிறது. எங்கள் மக்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். கடினமாக உழைக்கக் கூடியவர்கள். வேறு எதையும்விடத் தாய்நாட்டுக்கும், தாய் மொழிக்கும் முதல் மரியாதை கொடுப்போம். தமிழக அரசாங்கமும், மக்களும் உண்மையான வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். 

`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்!"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் எனப் பேரறிஞர் அண்ணா கூறினார். ஏழைகளுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல ஏழைகளுக்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அண்ணா.. எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா போல ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. தேர்தலுக்கு முன்பும், அதற்குப் பிறகு ஆட்சி அமைத்திட்ட போதும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தேவைப்பட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு தூதுவராக செயல்படத் தயாராக இருக்கிறேன். எங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவருடன் சேர்ந்து பணி செய்ய ஆர்வமாக இருக்கிறேன். தாய் நாட்டுக்கு வணக்கம்" எனக் கூறினார். 

ரவீந்திரநாத் குமாரின் பேச்சைக் காண வீடியோவில் 54:50 - 57:00 நிமிடத்தை ஓட்டவும்....

Vikatan