Published:Updated:

`யார் லெட்டர் பேடு கட்சி...' - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகச் சீறும் டி.டி.வி.தினகரன்!

சி.ய.ஆனந்தகுமார்
அமுதினியன் இரா
`யார் லெட்டர் பேடு கட்சி...' - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகச் சீறும் டி.டி.வி.தினகரன்!
`யார் லெட்டர் பேடு கட்சி...' - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகச் சீறும் டி.டி.வி.தினகரன்!
லெட்டர் பேடு கட்சி எனக் கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு டி.டி.வி.தினகரன் சவால் விடுத்துள்ளார்.
`யார் லெட்டர் பேடு கட்சி...' - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகச் சீறும் டி.டி.வி.தினகரன்!
நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கருத்தை அறிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இன்று திருச்சி வயலூர் சாலையில் உள்ள மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில், திருச்சி வடக்கு, தெற்கு மற்றும் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டக் கழகங்கள் சார்பிலான நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளைக் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திவருகிறார். இதற்காக நேற்று நள்ளிரவு திருச்சி வந்த டிடிவி தினகரன் திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக அவர் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அரசு கொறடா மனோகரன் மற்றும் மாநகர் மாவட்டச் செயலாளர் விஜய் சீனிவாசன் ஆகியோர் சகிதமாகத் தினகரன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
`யார் லெட்டர் பேடு கட்சி...' - அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகச் சீறும் டி.டி.வி.தினகரன்!

அப்போது அவர், "தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையும் எடுக்காததால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியவரிடம், அமைச்சர் ஜெயக்குமார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் லெட்டர் பேடு கட்சி என்றும் சசிகலா, தினகரனைத் தவிர யார் வந்தாலும், அ.தி.மு.க-வில் இணைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறாரே எனப் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தினகரன், ``எங்களை லெட்டர் பேடு கட்சி என்று விமர்சனம் செய்பவர்கள் ஏன் எங்களது எங்கள் கட்சியினரை  ஏமாற்றிப் பொய் சொல்லி அவர்களின் கட்சியில் இணைக்க வேண்டும். அப்படி இணைந்தவர்கள் பலர் மீண்டும் எங்களது கட்சியிலேயே வந்து இணைகிறார்கள். இவ்வளவு பேசும் அவரால் அவரது சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில்கூட தேர்தலில் டெபாசிட் வாங்க முடியவில்லை. அவர் எங்களை விமர்சிக்கிறார்.

நாங்குநேரி அடுத்த களக்காடு பகுதியில் உள்ள எங்கள் கட்சியின் கிளைச் செயலாளர் ஒருவரை ஏமாற்றி எடப்பாடி பழனிசாமி இடம் கூட்டி சென்றதாகக் கூறப்படும் நிலையில் அவர் எங்கள் கட்சிக்குத் திரும்பி வந்துவிட்டார். லெட்டர் பேடு கட்சி என்று அவர்கள் சொல்லும் எங்கள் கட்சியில் இவ்வளவு உறுப்பினர்கள் இருப்பார்களா" எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தி.மு.க-வில் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகக் குரல்கள் வலுத்து வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டதுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார் தினகரன். தொடர்ந்து ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தற்போது எங்களுடன் உள்ள எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் வேறு கட்சிகள் வந்து சேர்ந்தாலும் அவர்களை சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்திப்போம்" என்றார்.