Published:Updated:

``கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்!” - கிராமச் சபைக் கூட்டம் தொடர்பாக கமல் வேண்டுகோள்

ஜெ.பிரகாஷ்
``கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்!” - கிராமச் சபைக் கூட்டம் தொடர்பாக கமல் வேண்டுகோள்
``கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்!” - கிராமச் சபைக் கூட்டம் தொடர்பாக கமல் வேண்டுகோள்

மிழக அரசு, வரும் 28-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதில், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்புவிடுத்துள்ளார்.  

``கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்!” - கிராமச் சபைக் கூட்டம் தொடர்பாக கமல் வேண்டுகோள்

ஒவ்வோர் ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படாததையடுத்து, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதும் அரிதாகிவிட்டன. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து ஒவ்வோர் ஊரிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தச் சொல்லி தன் தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், சில கிராம சபைக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசினார். 

இந்த நிலையில், தமிழக அரசு வரும் 28-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், ``25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட, கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராம சபை அமைப்பு பெரிதாக நடைமுறைக்கு வராமல் முடங்கியிருந்த நேரத்தில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சி அதைச் செயல்படவைக்கும் முயற்சியை முன்னெடுத்தது. அதன்வழியில், வரும் ஜூன் 28 அன்று, தமிழகத்தில் இருக்கும் 12,000-க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டங்களில் எப்போதும்போல் திறம்படச் செயல்படுவதற்கு, இந்த முறையும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Vikatan