Published:Updated:

``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்

விகடன் விமர்சனக்குழு

`கல்குவாரிகளில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து தண்ணீர் கொண்டுவருவதாக அரசுதரப்பில் கூறப்படுகிறது. அப்படியென்றால், கெட்டுப்போன தண்ணீரைத்தான் இந்த அரசு மக்களுக்கு விநியோகம் செய்கிறதா?’

``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்
``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்
``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்

சென்னையில் மழை அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. ஆனால் ஏரி குளங்களை நிரப்பும் அளவுக்கான மழை இன்னும் பெய்யவில்லை. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை அபாயம் குறித்து ஏற்கெனவே அரசுக்கு எச்சரித்தோம் என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன். 

தண்ணீர் பிரச்னைக்கு என்னதான் காரணம்?

``கடந்தாண்டு பெய்யக்கூடிய பருவமழை சரியாக பெய்யாததின் விளைவுதான் இப்போதைய தண்ணீர் பிரச்னைக்கு முக்கிய காரணம். இது தொடர்பான பிரச்னையைக் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவந்து, இந்த ஆபத்தை அப்போதே அரசுக்கு நாங்கள் நினைவூட்டினோம். சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் எவ்வளவு தண்ணீர் குறைந்துள்ளது என்பது குறித்து புள்ளி விவரத்துடன் தெரிவித்தோம். இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டோம். அப்போது, `தண்ணீர் பிரச்னையெல்லாம் வராது’ என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் பதிலளித்தார். ஏரியை தூர்வாருவதே கிடையாது. இப்போதுதான் தூர்வார 500 கோடி ஒதுக்கியுள்ளனர். பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, மானியம் ஒதுக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை மானியம் நிறைவானால் தான் டெண்டரே இவர்களால் விட முடியும். சும்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அவர்கள் தூர்வாருவதற்குள் மழை வந்துவிடும். உடனே தூர்வாருவதாக கணக்குகாட்டி, பணத்தை கொள்ளையடித்துவிடுவர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் செய்யவேண்டியதை செய்யவில்லை. உரிய நேரத்தில் உரிய வேளையை இந்த அரசாங்கம், முன்கூடியே எடுக்காததால் இந்த அவலநிலை. கடந்தவருஷமே இந்த வேளையைச் செய்திருக்கலாம். 8 வருடமாக இந்த அரசுதான் ஆட்சியிலிருக்கிறது. தண்ணீரை தேக்கி வைக்கும் திட்டங்கள் எதுவுமே இவர்களிடம் இல்லை. 


வேலுமணி தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்கிறாரே?

அதேபோல இன்னொரு அமைச்சர், பள்ளிக்கூடங்களில் தண்ணீர் தட்டுப்பாடில்லை. பள்ளிக்கூடங்களை மூடாதீர்கள் என்கிறார். உணவு விடுதிகளை மூடாதீர்கள் என்கிறார்கள். இதையெல்லாம் ஏன் சொல்கிறார்கள். அப்படி அமைச்சர் சொல்வதுபோல தண்ணீர் இருந்தால், வீட்டை விட்டு பெண்கள் நாள்தோறும் வெளியே வந்து தண்ணீருக்காக ஏன் கஷ்டப்பட வேண்டும்? சாலைகளில் காலையில், இரவு நேரங்களில் பார்த்தால், பொதுமக்கள் எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இல்லாவிட்டால் அதையாவது பயன்படுத்திருக்கலாம். ஆக எல்லாவற்றிற்கும், மக்கள் மெட்ரோ வாட்டரை எதிர்பார்க்கவேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதைக்கூட கடந்த மாதத்தைக் காட்டிலும் இப்போது குறைத்துவிட்டார்கள்.

``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்

இப்படியிருக்கும்போது, கேரளாவிலிருந்து தண்ணீர் கொடுப்பதாகச் சொன்னால், எடுத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ, அதை வேண்டாம் என்று மறுக்கிறார்கள். சட்டமன்றத்தில் போன முறை எங்கள் உறுப்பினர்கள் பேசும்போது, `சென்னையைச் சுற்றியிருக்கும் கல்குவாரிகளைச் சுத்தப்படுத்தி, அதிலிருக்கும் தண்ணீரைக் கொண்டுவரலாமே...’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு இதே மந்திரி அன்று என்ன சொன்னாரு, `கல்குவாரி தண்ணீரெல்லாம் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீரில்லை’ என்றார். தற்கொலை செய்யும் இடமாக கல்குவாரிகள் இருக்கின்றன என்று இப்போதைய சர்வேக்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரமா மெட்ரோ வாட்டர் எம்.டி சொல்றாரு, அந்தக் கல்குவாரியிலிருந்துதான் தண்ணீரை எடுக்கிறோம் என்று. அந்தத் தண்ணீரைத்தான் இப்போது, சென்னைக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது, இந்த அரசின் பேச்சுகள், அறிக்கைகள். அப்போ கெட்டுப்போன தண்ணீரைத்தான் கொடுக்கிறீர்களா? அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ-க்களாகிய நாங்கள் போராடவேண்டியிருக்கிறது தண்ணீருக்கு. காரணம், மேலிடத்திலிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் சரியாகப் பணியாற்றவில்லை. மந்திரி என்ன சொல்கிறாரோ அதைத்தானே அவர்கள் கேட்கிறார்கள். நாங்கள் சொந்தச் செலவில், தண்ணீர் டேங்க் மூலம் நீரைக் கொண்டுவந்துகொண்டிருகிறோம். தனி ஒருவரால் தீர்க்கூடிய பிரச்னை இல்லை.

``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்

தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவந்தோம். இந்த அரசு அதை என்ன டெவலப் செய்தது. ரஷ்யன் கம்பெனியிடம் 50 கோடி லஞ்சம் கேட்டதை, அவர்கள் நீதிமன்றத்திலே தெரிவித்தனர். `50 கோடி கேட்கிறார்கள், நாங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்’ என்று அந்த நிறுவனம் விலகியது. அப்படிப்பட்ட அரசுதானே இது. புதிய வீராணம் என்று பெயர் மட்டுமே இவர்கள் வைத்துக்கொண்டார்கள். ஆனால், கருணாநிதி அமைத்துக்கொடுத்த பைப்களில்தானே தண்ணீரைக் கொண்டுவந்தார்கள். என்.டி.ராமாராவ் கிட்ட பேசி தண்ணீர்கொண்டுவந்தார். தி.மு.க ஆட்சியில்தானே கால்வாய்கள் தூர் வாரப்பட்டன. தண்ணீர்ப் பிரச்னை வதந்தி என்கிறார் அமைச்சர். வேடிக்கையாக இருக்கிறது. 

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாதது தண்ணீர்ப் பிரச்னைக்கு மற்றொரு முக்கியக் காரணமா?

தண்ணீர் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களிடம் மட்டுமே கூற முடிகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தால், அந்த வார்டுக்குள் இருக்கும் 60 தெருவுக்குள் அவர் சுற்றிக்கொண்டிருப்பார். பிரச்னைக்கான தீர்வு கிடைத்திருக்கும். என்னுடைய தொகுதியில் 7 கவுன்சிலர்கள் செய்யவேண்டிய வேலையை நான் செய்துகொண்டிருக்கிறேன். உள்ளாட்சி அமைப்புகள் இருந்திருந்தால், ஓரளவு மக்கள்தொடர்புகள் இருந்திருக்கும், பிரச்னைக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். 

``அவர்களுக்குத் தண்ணீரல்ல; ஒற்றைத் தலைமைதான் பிரச்னை!’ - விவரிக்கும் ஜெ.அன்பழகன்


கவுன்சிலர்களுக்குப் பதிலாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள்தான் இருக்கிறார்களே?

அவர்கள், பேப்பரில் கையெழுத்துப் போடுவதுடன் அவர்கள் வேலை ஓவர். மக்களையெல்லாம் அவர்கள் சந்திப்பதில்லை. தண்ணீருக்காக, எங்கு யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது களத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் தொகுதியில் கட்சிக்காரர்கள் தூங்கியே 15 நாள்கள் ஆகிவிட்டன. சென்னையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்தான் அதிகம் என்பதால், நாங்கள்  முடிந்த அளவு வேலைசெய்துகொண்டிருக்கிறோம். ஒருகட்டத்துக்குமேல் இந்த அரசு எதுவும் செய்யாததால்தான், நாங்கள் போராட்டத்தில் குதித்தோம். இதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அவர்களுக்கு ஒற்றைத் தலைவரா... இரட்டைத் தலைவரா என்பது தான் பிரச்னை. 


சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர உள்ளீர்கள். அதுகுறித்து?

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொடுத்துள்ளோம். ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். சபாநாயகரின் அத்துமீறல்கள், அவர் செய்யும் தவறான நடவடிக்கைகளைப் பேசத்தான் தீர்மானம் கொண்டுவருகிறோம். ஏனென்றால், அவர் அவையில் இருக்கும்போது இது தொடர்பாகப் பேச முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது, அவர் அறைக்குச் சென்றுவிடுவார். துணை சபாநாயகர்தான் அவையை நடத்துவார். அப்போது நாங்கள், சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைப்போம். அதுக்காகத்தான் தீர்மானம் கொண்டுவருகிறோம். முதல் வரிசையிலிருப்பவர்கள் மட்டும் தான் பேச நேரம் கொடுக்கிறார். பின்வரிசையிலிருப்பவர்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. பாயின்ட் ஆஃப் ஆடர் பேச எங்களுக்கு வாய்ப்பேயில்லை. சர்வாதிகார சட்டமன்றம். குடிநீர்ப் பிரச்னைகுறித்து எங்களைப் பேச விடமாட்டார்கள். உடனே மந்திரிகள், அதிகாரிகள் எழுதிக்கொடுத்ததைப் பேசிவிடுவார்கள். பின், சபாநாயகர் எங்களை உட்கார வைத்துவிடுவார். உடனே இதை முடித்துவைத்துவிடுவார். மீறினால், எங்களை வெளிநடத்திவிடுவார். இந்த ஆட்சியில் உங்களால் எதையும் பேசவே முடியாது. `செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்’’ என்று முடித்துக்கொண்டார். 
 

Vikatan