Published:Updated:

`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்!' - கொடியேரி பாலகிருஷ்ணன்

சிந்து ஆர்
`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்!' - கொடியேரி பாலகிருஷ்ணன்
`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்!' - கொடியேரி பாலகிருஷ்ணன்

``என் மகன் பினோய் வழக்கில் சமரசம் பேச யாரும் முயற்சி செய்யவில்லை. இது சம்பந்தமாக எந்த உதவியும் நான் செய்யமாட்டேன் என்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டேன்'' என கேரள சி.பி.எம். செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்!' - கொடியேரி பாலகிருஷ்ணன்

கேரள சி.பி.எம். செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி மீது துபாய் பார் டான்ஸராகப் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பினோய் கொடியேரி மூலம் ஒரு குழந்தை இருப்பதாகவும், அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும் இதுகுறித்து மும்பை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பினோய் மும்பை கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் சி.பி.எம். செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மனைவி வினோதினி தன்னை மிரட்டியதாக பீகார் இளம் பெண் கூறியுள்ளார்.

`மகன் பாலியல் வழக்கில் எந்த உதவியும் செய்யமாட்டேன்!' - கொடியேரி பாலகிருஷ்ணன்

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கொடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், ``என் மகன் பினோய் வழக்கில் சமரசம் பேச யாரும் முயற்சி செய்யவில்லை. கடந்த ஜனவரி மாதம் வீட்டில் நோட்டீஸ் வந்தபோதுதான், இந்தப் பிரச்னை குறித்து எனக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாய் என்ற முறையில் என் மனைவி வினோதினி மும்பை சென்று விவரங்கள் கேட்டறிந்தார். இது சம்பந்தமாக எந்த உதவியும் நான் செய்யமாட்டேன் என்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டேன். கட்சி நிர்வாகி என்ற நிலையில் நான் இந்த விஷயத்தில் தலையிடமாட்டேன். இது பொய்ப் புகார் என என் மகன் பினோய் கூறுகிறார். இதுகுறித்து கோர்ட்டு முடிவு செய்யட்டும். தலைமறைவாக இருக்கும் பினோயைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது'' என்றார்.