Published:Updated:

நளினியின் விருப்பம் ஏற்பு! - ஜூலை 5ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விகடன் விமர்சனக்குழு
நளினியின் விருப்பம் ஏற்பு! - ஜூலை 5ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நளினியின் விருப்பம் ஏற்பு! - ஜூலை 5ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரோல் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதி கோரிய மனுவில், நளினியை ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினியின் விருப்பம் ஏற்பு! - ஜூலை 5ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேரை விடுவிக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல, இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிடவும் அனுமதி கோரியிருந்தார்.  இதில், `காணோளி காட்சியின் மூலம் நளினி ஆஜராக விருப்பமிருக்கிறதா?’ என அவரிடம் கேட்டறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நளினியின் விருப்பம் ஏற்பு! - ஜூலை 5ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பரோல் வழக்கில் காணொலி காட்சியின்மூலம் ஆஜராகி வாதிட விருப்பமில்லை என நளினி கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த டிஎஸ்பி தலைமையில் 50 காவலர்கள் பாதுகாப்பிற்கு வரவழைக்க வேண்டும் என்பதால் நளினியை ஆஜர்படுத்த ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நளினியை ஜூலை 5-ம் தேதி மதியம் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Vikatan