Published:Updated:

`ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்’ - வைகோவுக்கு கன்ஃபார்ம், அன்புமணிக்கு...?

ந.பொன்குமரகுருபரன்
`ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்’ - வைகோவுக்கு கன்ஃபார்ம், அன்புமணிக்கு...?
`ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்’ - வைகோவுக்கு கன்ஃபார்ம், அன்புமணிக்கு...?

மிழகத்தில் அடுத்த மாதத்துடன் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. காலியாகும் பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

`ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்’ - வைகோவுக்கு கன்ஃபார்ம், அன்புமணிக்கு...?

தி.மு.க. சார்பில் வைகோவுக்கும், அ.தி.மு.க. சார்பில் அன்புமணி ராமதாஸுக்கும் எம்.பி. பதவியளிக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகவுள்ளன.

ரத்னவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன் ஆகிய நான்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தி.மு.க.வின் கனிமொழி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில், கனிமொழி தன் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டார். காலியாகவுள்ள எம்.பி. பதவியிடங்களுக்கான தேர்தலை முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, வரும் ஜூலை 1-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசித் தேதி ஜூலை 8-ம் தேதியாகும். வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 11-ம் தேதி கடைசி நாள். ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று மாலையே முடிவுகள் வெளியாகவுள்ளன.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பட்டியலை, தமிழகத் தேர்தல் ஆணையம் ஜூலை 22-ம் தேதிக்குள் டெல்லிக்கு அனுப்பியாக வேண்டும். இன்றைய தேதிப்படி, எம்.எல்.ஏ.க்களின் பலத்தைக் கொண்டு பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கு தலா மூன்று எம்.பி.க்களைச் சமமாகப் பிரித்துக்கொள்ளலாம். தி.மு.க. சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளது. ஆனால்  அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் எம்.பி. பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.   பட்டியல் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகவுள்ளன.

Vikatan