Published:Updated:

`விஜயதரணி செய்தது சரி... நான் செய்தது தவறா?' - சஸ்பெண்டு குறித்து கராத்தே தியாகராஜன்

இ.லோகேஷ்வரி
`விஜயதரணி செய்தது சரி... நான் செய்தது தவறா?' - சஸ்பெண்டு குறித்து கராத்தே தியாகராஜன்
`விஜயதரணி செய்தது சரி... நான் செய்தது தவறா?' - சஸ்பெண்டு குறித்து கராத்தே தியாகராஜன்

மிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். 'எதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை' என்று விளக்கமளிக்கிறார் கராத்தே தியாகராஜன்.

`விஜயதரணி செய்தது சரி... நான் செய்தது தவறா?' - சஸ்பெண்டு குறித்து கராத்தே தியாகராஜன்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். அதோடு, குறிப்பிட்ட பகுதியைத் தனக்கு ஒதுக்கி, தேர்தல் பொறுப்பாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் என்று தியாகராஜன் கேட்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கராத்தே தியாகராஜன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை சஸ்பெண்டு செய்திருக்கிறது.  இதற்கான உத்தரவை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் பிறப்பித்துள்ளார். தியாகராஜன் கூறிய கருத்தையடுத்து, தி.மு.க-வின் கே.என். நேருவும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்து நிற்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

`விஜயதரணி செய்தது சரி... நான் செய்தது தவறா?' - சஸ்பெண்டு குறித்து கராத்தே தியாகராஜன்

சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து கராத்தே தியாகராஜன் கூறுகையில், ``தொலைக்காட்சி வாயிலாகத்தான், நான் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டதைத் தெரிந்துகொண்டேன். நேரடியாக என்னிடம் அதை யாரும் தெரியப்படுத்தவில்லை. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், எல்லோருக்கும் தங்களுடைய கருத்துகளை முன்வைக்க உரிமை இருக்கிறது. அந்த வகையில்தான், தனித்து நிற்பது குறித்து நானுன் கருத்துக் கூறினேன். இதற்காக சஸ்பெண்டு செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிப்பார்த்தால், சமீபத்தில் மோடியைப் பாராட்டி பேசியிருக்கிறார் காங்கிரஸின் விஜயதரணி. இதைவைத்துப் பார்த்தால், எதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டேன் என்றே எனக்குத் தெரியவில்லை.

`விஜயதரணி செய்தது சரி... நான் செய்தது தவறா?' - சஸ்பெண்டு குறித்து கராத்தே தியாகராஜன்

நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததிலிருந்து, நான்குமுறை சஸ்பெண்டு  செய்யப்பட்டிருக்கிறேன். ஒருமுறை மாநிலத் தலைமை என்னை நீக்கினால், மறுமுறை மத்தியத் தலைமை  என்னை நீக்கி உத்தரவிடும்.  ஆனாலும், காங்கிரஸ் கட்சியின்மீது எனக்குள்ள பற்று என்றும் மாறாது. அதோடு, நான் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து மாநிலத் தலைமைக்கும் தெரியாது என்றே நினைக்கிறேன். அவர்களும் என்னைப் போலவே, தொலைக்காட்சியைப் பார்த்தே தெரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். எதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டேன் என்பதை அறிந்து, விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
 

Vikatan