Published:Updated:

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்?

ந.பொன்குமரகுருபரன்

அடுத்த தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்?
தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்?

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம், வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைமைச் செயலாளராக, தற்போதைய நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சண்முகம்?

நிதித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர், சண்முகம். 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சண்முகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படும் சண்முகம், தமிழ்நாடு நிதித்துறை நெருக்கடியைச் சந்தித்த நேரத்தில் எல்லாம், ஆட்சி மேலிடத்துக்கு உறுதுணையாக நின்றவர். ஜெயலலிதா, ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி என மூன்று முதல்வர்களிடமும் நிதித்துறை செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

சீனியாரிட்டியில் கிரிஜா வைத்தியநாதனுக்கு அடுத்தபடியாக, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் வருகிறார். ஆனாலும், முதல்வரின் சாய்ஸ் சண்முகம்தானாம். விரைவிலேயே சண்முகம் தலைமைச் செயலாளராகும்  அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது. முதல்வரின் செயலாளராக இருக்கும் செந்தில்குமார், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்படுவார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vikatan