Published:Updated:

மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் தி.க. ஆர்ப்பாட்டம்!

விகடன் விமர்சனக்குழு
மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் தி.க. ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் தி.க. ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் தி.க. ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டுவர உள்ள  புதிய கல்விக் கொள்கை, மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றை  எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் திருச்சியில் சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலை அருகில்  ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என முத்தரப்பினரும் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.

 திருச்சி மண்டல திராவிடர் கழகத்தின் தலைவர் ஞான.ஆரோக்கிய ராஜ் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

'மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், மருத்துவ கல்வி சேர்க்கைக்கு ‘நீட்' எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை கைவிட வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், ‘நீட்’ நுழைவு தேர்வு பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகளை பாதிக்கும், எனவே அதைத் தடுத்தே ஆகவேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி  திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

-சி.ய.ஆனந்தகுமார் 

 படங்கள் : என்.ஜி.மணிகண்டன்