Published:Updated:

தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு ஆம்னி பேருந்துகள் ஓடுகின்றன தெரியுமா?

விகடன் டீம்
தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு ஆம்னி பேருந்துகள் ஓடுகின்றன தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு ஆம்னி பேருந்துகள் ஓடுகின்றன தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு ஆம்னி பேருந்துகள் ஓடுகின்றன தெரியுமா?

இரவு, அதிகாலை நேரங்களில் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஆம்னி பஸ்களே கண்களில் படுகின்றன. சென்னையிலிருந்து தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, தென்னிந்தியாவின் பிரதான நகரங்கள் பலவற்றில் இருந்தும் தமிழக நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தில் இயக்கப்படும் மொத்த ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை குறித்து, 'தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க'த்தின் பொருளாளர் மாறனிடம் பேசினோம்.

"தமிழகத்துக்கு உள்ளேயும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் எனத் தமிழ்நாட்டில் மொத்தம் 1,500 ஆம்னி பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் நான் ஏ.சி சீட், நான் ஏ.சி ஸ்லீப்பர், ஏ.சி சீட், ஏ.சி ஸ்லீப்பர், வால்வோ, மல்ட்டி ஆக்ஸில் என ஆறு வகையான பேருந்துகள் இருக்கின்றன. வால்வோ மற்றும் மல்ட்டி ஆக்ஸில், பயணச் சுமை தெரியாத சொகுசுப் பேருந்துகள். இதில் வால்வோவில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. மல்ட்டி ஆக்ஸில் வகை பேருந்துகளில் படுக்கை வசதியும் உண்டு..." என்றார் அவர்.