Published:Updated:

`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்!’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி

ரா.சதீஸ்குமார்
`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்!’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி
`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்!’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி

கொதிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் காலநிலை மாற்றம் காரணமாக சராசரி வெப்பநிலை வேகமாக உயர்ந்துவருவது ஆய்வாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்!’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி

மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமான நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊட்டி ஆயிரக்கணக்கான தாவரங்கள், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, நீர் நில வாழ்வன, ஓரிட வாழ்வுகள் என எண்ணற்ற உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக உள்ளது. மேலும், கொள்ளை கொள்ளும் இயற்கை அழகால் சர்வதேச சுற்றுலா நகராகவும் விளங்கி வருகிறது. ஊட்டி என்றாலே குளிர் என்ற எழுதப்படாத விதி உள்ளது போன்ற உணர்வை மக்கள் உள்வாங்கியுள்ளனர். பருவ நிலை மாற்றம், மக்கள் தொகைப்பெருக்கம், காடழிப்பு, புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணிகள் ஊட்டியைச் சூடாக்கிவருகின்றன.

`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்!’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி

ஊட்டியில் உள்ள மத்திய நீர் மற்றும் மண்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மணிவண்ணன் மற்றும் கஸ்தூரி திலகம் ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளில் நீலகிரியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும்போது 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்!’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி

அறிவியலாளர் மணிவண்ணன் கூறுகையில், ``1958 கணக்கெடுப்பின்படி பார்க்கையில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை கடுமையாகக் கூடி வருகிறது.1960 முதல் 1989 வரை 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் 2 முறை மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால், 1991 முதல் 2018 வரை 15 முறை 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இதேநிலை நீடித்தால் அதிகமான மழை அல்லது அதிகமான வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது” என்றார்.

சூழலியலாளர்கள் கூறுகையில், ``நீலகிரியில் அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வு தாவர வளர்ச்சி மற்றும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். சூழலுக்குப் பயனற்ற தாவரங்கள் அதிகளவில் பெருகி சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்” என்கின்றனர்.

Vikatan