Published:Updated:

`மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை ஏசி கட்!' - காரணம் சொல்லும் சென்னை மெட்ரோ நிறுவனம்

ம.காசி விஸ்வநாதன்
`மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை ஏசி கட்!' - காரணம் சொல்லும் சென்னை மெட்ரோ நிறுவனம்
`மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை ஏசி கட்!' - காரணம் சொல்லும் சென்னை மெட்ரோ நிறுவனம்

கோடைகாலம் தொடங்கி, கடந்த சில வாரங்களாகவே கடும் வெயில் சென்னையை வாட்டியெடுத்துவருகிறது. முக்கிய ஏரிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால், பல இடங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க சில நாள்களாக சென்னை மெட்ரோ நிர்வாகம், கூட்டம் அதிகம் இல்லாத மதிய வேளைகளில் ஏசியை ஆஃப் செய்துவருவது தெரியவந்துள்ளது. 

`மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை ஏசி கட்!' - காரணம் சொல்லும் சென்னை மெட்ரோ நிறுவனம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, ஒரு நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையம் இயங்க நாள் ஒன்றுக்கு 9,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதில் 7,000 லிட்டர் ஏசியை இயங்கவைக்க மட்டும் செலவாகிறது. இதனால், மதியம் 12 மணி முதல் 5 மணி வரை இந்த நிலையங்களில் ஏசி ஆஃப் செய்யப்பட்டுவருகிறது. இதனால், இந்த நேரத்தில் நடைமேடைகளில் வரும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், போதிய காற்றோட்டம் வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விரைவில் இது குறைக்கப்படும். "இந்த நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது ஏசி ஆன் செய்யப்படுகிறது. வெப்பநிலை 26 டிகிரியைத் தாண்டாதவண்ணம் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இப்படி, ஏசியை ஆஃப் செய்வதன்மூலம் குறைந்தது 30% சதவிகிதம் தண்ணீரையாவது சேமிக்க முடிகிறது" என்கிறது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL).

`மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை ஏசி கட்!' - காரணம் சொல்லும் சென்னை மெட்ரோ நிறுவனம்

மேலும், ரயில்களின் அனைத்து பெட்டியிலும் இரண்டு 41Kv ஏசி யூனிட்டுகள் இதுவரை எந்த ஒரு பிரச்னையுமின்றி முழுவீச்சிலேயே இயக்கப்பட்டுவருவதாக, மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த தற்காலிக நடைமுறையை அனுசரித்து நீர் சேமிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது அந்த நிறுவனம்.
 

Picture Credit: twitter/cmrlofficial

Vikatan