Published:Updated:

`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்!' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி

கு.ஆனந்தராஜ்

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்க, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷ'னைத் தொடங்கியவர் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன். இந்த ஃபவுண்டேஷன் மூலம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலன்பெற்றுள்ளனர். ஃபவுண்டேஷன் பணிகள் குறித்துப் பேசுகிறார், டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்.

`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்!' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி

``எங்கள் ஃபவுண்டேஷன் குழுவினர் புற்றுநோய் பாதித்த குழந்தைகளைத் தேர்வு செய்வார்கள். தொடக்கத்திலும், சிகிச்சை பெற்றுவரும்போதும், குணமடைந்து வீட்டுக்குச் செல்லும்போதும் எனச் சில முறைதான் குழந்தைகளை நான் சந்திப்பேன். ஏனெனில், புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் மிகவும் வேதனையானவை. அந்தத் தருணத்தில் குழந்தைகள் மருத்துவச் சூழலை மறந்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் அக்குழந்தைகளைச் சந்தித்தால், அவர்களின் உடல்நிலை குறித்து நிச்சயம் கேட்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கும் நான் மருத்துவர் என்பது தெரியவரும். தவிர, அந்தத் தருணத்தில் குழந்தைகளின் பெற்றோர் எனக்கு நன்றி சொல்வார்கள். இதையெல்லாம் நான் விரும்புவதில்லை. அதேநேரம், சிகிச்சை தருணத்தில் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற அதிகம் முயல்வோம். 

`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்!' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி

எங்களிடம் சிகிச்சைபெற்று வந்த ஶ்ரீராம் என்ற குழந்தையின் உடல்நிலை கடந்த ஆண்டு மோசமானது. அந்தக் குழந்தை நடிகர் ரஜினி சாரை சந்திக்க விரும்பினார். அதை நிறைவேற்றினோம். இந்த ஆண்டு ஜனவரியில் ஶ்ரீராம் இறந்துவிட்டான். அந்தத் தகவலை ரஜினி சாரிடம் தெரிவித்தபோது, `ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' எனக் கூறி வருந்தினார். எங்களிடம் சிகிச்சைபெற்றுவரும் மற்ற குழந்தைகளைப் பற்றி அவரிடம் கூறினேன். மேலும், அக்குழந்தைகளை நேரில் வந்து சந்தித்துப் பேசுமாறும் ரஜினி சாரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் எல்லா குழந்தைகளையும் சந்தித்தார், ரஜினி சார்.

புற்றுநோயில் பல வகை இருந்தாலும், ரத்தப் புற்றுநோய்தான் மிகவும் பிரச்னையானது. அந்த வகை புற்றுநோய் வந்துவிட்டால், உடல் முழுக்க நோயின் தன்மை பரவிவிடும். எனவே, அத்தகைய புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகளைத்தான் அதிகளவில் தேர்வு செய்து இலவச சிகிச்சையளிக்கிறோம்" என்கிறார் ப்ரியா ராமச்சந்திரன்.
 
Vikatan