Published:Updated:

`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்

கே.குணசீலன்
`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்
`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்

தஞ்சாவூரில், பெண் ஒருவர் பாசமாக வளர்த்த பசுமாடு ஒன்றின்மீது வேன் மோதியதில், பின் கால் ஒன்று முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே அந்தப் பெண், பசுவின் கழுத்தை கட்டிக்கொண்டு, `நீ நாலு மாசம் செனையா இருக்க. இதை எப்படித்தான் தாங்கப்போற' என  நடுரோட்டிலேயே கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.எம்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவர், இரண்டு பசு மாடுகளை வளர்த்துவருகிறார். கணவர் புகழேந்தி பால் வியாபாரம் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன், கால் பாதத்தில் ஆணி ஏற்பட்டதால், தற்போது நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில், முத்து லெட்சுமி வளர்த்த இரண்டு பசுக்கள் கறக்கும் பாலில் வரும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்திவந்துள்ளனர்.

`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்

இந்த நிலையில், முத்துலெட்சுமி வளர்த்த பசுமாடு ஒன்று, அதே பகுதியில் சாலை ஓரத்தில் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது, ஆவின் பால் நிறுவனத்தில் பால் எடுத்துச்செல்லும் வேன் ஒன்று அதிவேகமாக வந்ததுடன், சாலை ஓரத்தில் நின்ற பசுவின் பின்பக்கத்தில் மோதியது. இதில்,  பசுவின் பின் பக்க கால் ஒன்றில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, மாட்டின் முட்டிக்கும் பாதத்திற்கும் நடுவே எழும்பு முறிந்து தொங்கியதோடு, ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த வேன் டிரைவர் நிற்காமலேயே சென்றுவிட்டார். வலி தாங்கமுடியாத பசு காலை தூக்கிக்கொண்டு அம்மா என கத்திக்கொண்டே நின்றது.

`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்

பசு படும் வேதனையைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பலர், பசுவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தனர். பின்னர், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவைக்கு போன்செய்தனர். அவர்கள், எந்தப் பதற்றமும் இல்லாமல் பொறுமையாக கேட்டுவிட்டு ஆம்புலன்ஸ் இருக்கு. ஆனால், டாக்டர் இல்லை எனப் பதில் கூறியுள்ளனர். உடனே போனில் பேசிய நபர் மாட்டின் நிலைமையை எடுத்துச் சொல்ல, ப்ளூ கிராஸ் அமைப்பின் நம்பர் தருகிறோம், அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள். இல்லை என்றால் போனை டாக்டருக்கு கனெக்ட் செய்கிறோம், அவர் சொல்லும்படி  நீங்களே சிகிச்சை அளியுங்கள் எனக் கூறி, டாக்டருக்கு லைன் கொடுத்தனர். ஆனால், அவர் சொன்னதில் எந்தப் புண்ணியமும் இல்லாமல்போனது. இதற்கிடையே, அருகில் இருந்தவர்கள் முத்துலெட்சுமியிடம் நடந்ததைக் கூறினர். பதறியடித்து ஓடி வந்த அவர், மாட்டின் கழுத்தைக் கோத்து கட்டிப்பிடித்துக்கொண்டு கதறினார். அய்யோ, கால் இப்படி உடைந்து தொங்குதே... நீ  இனிமேல்  எப்படி நடப்ப... ரத்தம் கொட்டுதே நான் என்ன செய்வேன். நாலு மாசம் செனையா இருக்குற இந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சே. இதை எப்படி தாங்கப்போற'' என்று கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

`மூன்று வேளை சோறு போட்டது; இனி என்ன பண்ணப்போறேன்!'- கால் உடைந்த பசுவுக்காகக் கதறும் பெண்

முத்துலெட்சுமி கட்டிகொண்டு அழுதபோது, தன் வலியைப் பொறுத்துக்கொண்டு, பசு அவரின் தலையில் நாக்கால் தடவி அழுகையை நிறுத்தச் சொன்னது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அங்கு நின்றவர்களிடம், ``இப்பதான் என் கணவருக்கு கால் முடியாமல் போய் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறார். அவரால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.நான் வளர்க்கும் இரண்டு பசுக்கள் கறக்கும் பாலில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் நாங்கள் சாப்பிட்டு வருகிறோம். 4 மாசம் செனையா இருக்குறா. அதனால, ரொம்பவே கவனமாக பார்த்துக்கிட்டேன். என் கணவர் இதைப் பார்த்தா ஒடைஞ்சே போயிடுவார். அவரை நான் எப்படி தேத்த போறேன் என தெரியலை. இந்த வாயில்லா ஜீவன் தான் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டது. இனி நான் என்ன பண்ணப்போறேன்'' என்று அழுது புலம்பிக்கொண்டே இருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Vikatan