Published:Updated:

`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி

துரை.வேம்பையன்
`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி
`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி

ஹெல்மெட் இல்லாமல் மகளுடன் பைக்கில் சென்ற கரூர் பெண்ணுக்கு, அவரின் மகளைவிட்டே ஹெல்மெட் அணியவைத்து, நூதன முறையில் அறிவுரை வழங்கிய கரூர் எஸ்.பி-யின் செயல், பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி

 கரூர் மாவட்ட எஸ்.பி-யாக சமீபத்தில் பொறுப்பேற்று இருப்பவர் விக்ரமன். கரூருக்கு பணிக்கு வந்த நாளிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மூலம், மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறார். கரூர் மாவட்டம் மணல் கொள்ளைக்கு பெயர்பெற்றது என்பதால், மணல் கொள்ளை சம்பந்தமாக எந்த ரூபத்தில் புகார் வந்தாலும், உடனே நடவடிக்கை எடுக்கிறார். அதோடு, 'கந்துவட்டிக் கொடுமை தமிழ்நாட்டிலேயே கரூரில்தான் அதிகம்' என்ற புகாரும் கிடைக்க, கரூர் முழுக்க உள்ள ஃபைனான்ஸியர்களை அழைத்து கலந்தாய்வுக் கூட்டம் போட்டதோடு, 'முறைப்படி உங்கள் தொழிலை பதிவுசெய்து, தொழில் நடத்த வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள அளவில் மட்டும் வட்டிகளைப் பெற வேண்டும். மீறி மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என்று வசூல் செய்தால், கடுமையான நடவடிக்கை பாயும்' என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அடுத்து, கரூர் மாவட்டம் தமிழகத்தின் மையத்தில் இருப்பதாலும், முக்கிய நெடுஞ்சாலைகள் செல்வதாலும், அதிக விபத்துகள் ஏற்படும் மாவட்டமாகக் கரூர் உள்ளது. இந்த விபத்துகளில் அதிகம் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குக் காரணம், யாரும் ஹெல்மெட் அணிவதில்லை என்பதால் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் எஸ்.பி விக்ரமன்.

`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி


 

தினமும் முக்கிய பாயின்டுகளுக்குச் சென்று, ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்களை மறித்து, அறிவுரை சொல்வதோடு, ஹெல்மெட் இல்லாமல் செல்லும் சிலருக்கு காவல்துறை சார்பில் ஹெல்மெட் வழங்குகிறார். அந்த வகையில், கரூர் பேருந்துநிலையம் அருகில் எஸ்.பி விக்ரமன், காவல்துறையினரோடு இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு பெண் தன் மகளுடன் வண்டியில் ஹெல்மெட் அணியாமல் வர, அவரது வாகனத்தை மறித்து ஓரங்கட்ட வைத்தார். "பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு இப்படி ஹெல்மெட் இல்லாமல் வர்றீங்களே. உங்களுக்காகவது இல்லைன்னாலும், உங்க மகளுக்காவது ஹெல்மெட் அணியலாமே... எங்கே உங்க ஹெல்மெட்?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், "ஹெல்மெட் இன்னும் வாங்கவில்லை சார்" என்று சொல்ல, கரூர் மாவட்டக் காவல்துறை சார்பில் அவருக்கு ஒரு ஹெல்மெட் வழங்கப்பட்டது. அந்த ஹெல்மெட்டை அந்தப் பெண்ணின் மகளிடம் கொடுத்து, "நீயே உங்கம்மாவுக்கு அறிவுரை சொல்லு. அவங்க தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிடு. இனிமேல் வீட்டிலிருந்து உங்கம்மா கிளம்பும்போது, தவறி மறந்துபோனால்கூட நீ நினைவுபடுத்தி, அவங்களை ஹெல்மெட்டை அணியச் சொல்லணும் சரியா?" என்று கேட்டார்.

`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி


 

அதற்கு அந்தப் பெண்ணின் மகள், "சரி அங்கிள்" என்றபடி தன் தாயிடம் திரும்பி, "இந்த ஹெல்மெட்டை போடும்மா. இனிமே வண்டியை எடுக்கும்போதெல்லாம் இந்த ஹெல்மெட்டையும் மறக்காம தலையில் மாட்டிக்கணும். எனக்கு உன்னைவிட்டா, வேற யாரும்மா இருக்கா?" என்று உருக்கமாகச் சொல்ல, அந்தப் பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து, "இனி வண்டியைக்கூட மறப்பேன். ஆனா, ஹெல்மெட் அணியமட்டும் எக்காரணம்கொண்டும் மறக்க மாட்டேன்" என்று சொல்ல, அவர்களை வழியனுப்பி வைத்தார் எஸ்.பி விக்ரமன். அதேபோல், ஹெல்மெட்டோடு தானும் வண்டி ஓட்டி, எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஹெல்மெட் அணிய வைக்க, இரும்புக்கரம் கொண்டு செயல்படாமல், வாகன ஓட்டிகளை எஸ்.பி விக்ரமன் சைக்காலஜிக்கலாக அணுகும் முறை, மக்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவருகிறது.

Vikatan