Published:Updated:

விபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்!

JAYAVEL B
விபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்!
விபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்!

விபத்து என்றால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்த குரலுக்கு விரைந்து வருவார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் உயிரைக் காப்பதோடு உடைமையையும் காத்து உதவுவார்கள் என்பதற்குக் காஞ்சிபுரம் கார் விபத்து ஓர் உதாரணம். விபத்தில் காயம் அடைந்தவர்கள் கொண்டு வந்த 69 லட்ச ரூபாயைச் சிந்தாமல் சிதறாமல் காவல்துறையிடம் ஒப்படைத்து தங்களின் நேர்மையை நிரூபித்திருக்கிறார்கள் அவர்கள். 

விபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்!

சென்னை மாதவரம் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்துவரும் வியாபாரி ஒருவர், தன்னுடைய ஊழியர்களை நிலுவைத் தொகையை வசூல் செய்து வர வேலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். நிலுவைத் தொகையை வசூல் செய்த ஊழியர்கள் நேற்று வேலூர் பகுதியில் இருந்து 69 லட்சம் ரூபாய் பணத்துடன் காரில் சென்னை திரும்பினார்கள். காஞ்சிபுரம், சின்னையன் சத்திரம் வழியாகத் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்தனர்.  

விபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்!

ஆம்புலன்ஸ் வந்ததும், மருத்துவ உதவியாளர் விஜயன் மற்றும் ஓட்டுநர் சந்தானம் படுகாயமடைந்த இருவருக்கும் முதலுதவி செய்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தின்போது சிதறிக்கிடந்த 69 லட்ச ரூபாயைக் கொண்டுவந்து காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸின் ஊழியர்களின் நேர்மையைக் கண்டு காவல்துறையினர் அவர்களைப் பாராட்டினர். 108 ஆம்புலென்ஸின் மதிப்பை உயர்த்தியிருக்கிறது ஊழியர்களின் நேர்மை!

Vikatan