Published:Updated:

கண்முன்பே அம்மாவை ஏற்றிக்கொன்ற லாரி!- கதறிய மகள்; சேலத்தில் நடந்த பயங்கரம்

வீ கே.ரமேஷ்
க .தனசேகரன்
கண்முன்பே அம்மாவை ஏற்றிக்கொன்ற லாரி!- கதறிய மகள்; சேலத்தில் நடந்த பயங்கரம்
கண்முன்பே அம்மாவை ஏற்றிக்கொன்ற லாரி!- கதறிய மகள்; சேலத்தில் நடந்த பயங்கரம்
கண்முன்பே அம்மாவை ஏற்றிக்கொன்ற லாரி!- கதறிய மகள்; சேலத்தில் நடந்த பயங்கரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மகள் கண் முன்னே தாயின் மீது லாரி ஏறியது. கண் இமைக்கும் நேரத்தில் தாயின் உடல் இரத்த வெள்ளத்தில் நசுங்கிச் சிதைந்து போயிருப்பதைப் பார்த்து மகள் கதறி அழுத சம்பவம் அனைவருக்கும் தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஆசிரியர் காலனியில் கிறிஸ்டி அகல்யா ராணியும், இவருடைய 12 வயது மகள் கிரேஸியும் வசித்து வந்தார்கள். கிறிஸ்டி அகல்யா ராணி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் எபனேசர் ஜெய்சன். இவர் திருநெல்வேலியில் அல்வா கடை நடத்தி வருகிறார். தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கிரேஸி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம்போல நேற்று மாலை தன் மகள் கிரேஸியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு கிறிஸ்டி அகல்யா ராணி அழைத்து வந்துள்ளார். தாரமங்கலம் பிரதான சாலையோரமாக நடந்து சென்றபோது வேகமாக வந்த லாரி கிறிஸ்டி மீது ஏறி இறங்கியது. இதில் கிறிஸ்டி அகல்யா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைப் பார்த்து கிறிஸ்டியின் மகள் கிரேஸி கதறி அழுத காட்சி அருகில் இருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

கிறிஸ்டி மீது ஏறிய லாரி சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாகவே சென்றுவிட்டது. அதையடுத்து, தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த கடையின் சிசிடிவி கோமராவில் உள்ள பதிவுகளைப் பார்த்து லாரியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநர் வேலு கிருஷ்ணனைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Vikatan