Published:Updated:

உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை! - நீலகிரி துயரம்

ரா.சதீஸ்குமார்
உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை! - நீலகிரி துயரம்
உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை! - நீலகிரி துயரம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை பரிதாபமாக பலியானது.

உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை! - நீலகிரி துயரம்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலைக்கு அடுத்தபடியாக யானைகள் அதிகம் வாழும் பகுதியாக கூடலூர், பந்தலூர் விளங்கி வருகிறது. வனப்பகுதிகள் தேயிலைத் தோட்டங்கள், விளை நிலங்கள் நிறைந்த இங்கு மக்கள் தொகையும் கூடிக்கொண்டே போகிறது. தண்ணீர் தேடி யானைகள் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் உலவுகின்றன. இதனால் நாளுக்கு நாள் யானை மனித மோதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை! - நீலகிரி துயரம்

இந்த நிலையில், பந்தலூர் சேரம்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோரஞ்சால் மயானம் அருகே நேற்று இரவு உணவு தேடி வந்த யானை ஒன்று இதே பகுதியில் இறந்துகிடந்தது. காலையில் இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து பார்த்ததில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்திறந்திருப்பதை உறுதி செய்தனர்.

உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை! - நீலகிரி துயரம்

வனத்துறையினர் கூறுகையில், ``நேற்று இரவு உணவு தேடி கோரஞ்சால் பகுதிக்கு வந்த ஒற்றை யானை அருகில் இருந்த மரத்தைத் தள்ளியுள்ளது. இதில் மரம் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி கீழே சரிந்து யானையின் மீது பட்டதில் இறந்துள்ளது" என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Vikatan