Published:Updated:

மண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...

கே.குணசீலன்
மண்ணோட வளமும் போச்சு  எங்க வாழ்க்கையும் போச்சு -  கதறும் கதிராமங்கலம் மக்கள்...
மண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றுக்குள் சென்றது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுற்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததையடுத்து ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் உடைப்பை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணோட வளமும் போச்சு  எங்க வாழ்க்கையும் போச்சு -  கதறும் கதிராமங்கலம் மக்கள்...

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் கச்சா எண்ணெயை பூமிக்கடியிலிருந்து ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி அதை விளைநிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய் வழியாக நாகை மாவட்டம் குத்தாலத்துக்கு அனுப்பி அதை சுத்திகரிப்பு செய்துவருகின்றனர். இதனால் கதிராமங்கலத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் குழாய் தண்ணீரில் அடிக்கடி கச்சா எண்ணெய் கலந்துவருவதாகவும் இதற்கு முன் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டால் மக்கள் பலவித நோய்கள் தாக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இதையடுத்து, ஓ.என்.ஜி.சி முற்றிலுமாக கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

மண்ணோட வளமும் போச்சு  எங்க வாழ்க்கையும் போச்சு -  கதறும் கதிராமங்கலம் மக்கள்...

இந்த நிலையில், கதிராமங்கலம் வெள்ளைபிள்ளையார்கோயில் வழியாக குத்தாலத்துக்கு பூமிக்கடியில் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் குழாய்க்கு அருகில் உள்ள விக்ரமன் ஆற்றில் பாய்ந்தது. சுமார் 150 அடி நீளத்துக்கு குட்டைபோல் கச்சா எண்ணெய் தேங்கி பரவியதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பின்னர் இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுற்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.

மண்ணோட வளமும் போச்சு  எங்க வாழ்க்கையும் போச்சு -  கதறும் கதிராமங்கலம் மக்கள்...

உடனடியாக தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் விரைந்து வந்தனர். மேலும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஊழியர்கள் வந்ததோடு குழாய் மூலம் செல்லும் கச்சா எண்ணெயை நிறுத்திவிட்டு, கசிவு ஏற்பட்ட இடத்தில் அடைப்பை சீரமைத்தனர்.

இதுகுறித்து கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம், வளமான எங்க பகுதி ஓ.என்.ஜி.சி வருகையால் வறண்டு போய்விட்டன. பூமிக்கடியில் ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெயை உறிஞ்சி வருவதால் மண்ணோட வளமும் போச்சு மக்களோட வாழ்வும் போச்சு. அடிக்கடி இதுபோன்று குழாயில் கசிவு ஏற்படுவதும் அதை ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் சரி செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. எப்போது என்ன நடக்குமோ என பதற்றத்தோடு வாழ வேண்டியிருக்கிறது'' என்றனர்.

Vikatan