Published:Updated:

விகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை!

கண்ணதாசன் அ
விகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை!
விகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை!

ரும்புகள் வெட்டப்பட்டு ஏழு மாதங்களுக்கு மேலாகியும் நிலுவைத்தொகை வழங்காத காரணத்தால், திண்டிவனம் சுற்றுவட்டார கரும்பு விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர, முண்டியம்பாக்கத்தில் இயங்கிவரும் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் திண்டிவனம் கோட்டத்தை கடந்த வெள்ளி (21.06.19) அன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் செய்தி, 21.06.19 அன்று விகடன் தளத்தில் வெளியானது.

விகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை!

இதைத் தொடர்ந்து, நேற்று கரும்பு விவசாயிகள் மீண்டும் ஆலையின் திண்டிவனம் கோட்டத்தில் கூடியிருந்தனர். அப்போது, கரும்பு ஆலை நிறுவனம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், ஆலையின் சார்பில் திருஞானம் (DGM), உதவிமேலாளர் சிவாஜி ஆகியோர் பங்கேற்றனர். கரும்பு விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் குறைகளையும் நேரில் கேட்டறிந்த திருஞானம், "இன்னும் இரண்டு மாதத்திற்குள் தங்களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையைச் சேர்த்துவிடுகிறோம். நிலுவைத் தொகையைத் தருவதற்குள் கூட்டுறவு வங்கியில் நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டும் சூழல் ஏற்பட்டால், நாங்கள் அதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் செய்கிறோம். தற்போது சிலருக்கு ஓவர் டியூ (OD) செலுத்தும்படி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்ததாகக் கூறினீர்கள். அவர்களுக்கு, வட்டியின்றி அசலை மட்டும் செலுத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம். வெட்டுக்கூலி தருவதில் இனி தாமதம் ஏற்படாது. சிலர் தனிப்பட்ட கோரிக்கைகளை வைத்தீர்கள், அதையும் தீர்க்க முயற்சி செய்கிறோம்.

உங்கள் பகுதியில் சூப்பர்வைசர் மணிகண்டன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதைத் தவிர்க்கும்படியான உங்கள் கோரிக்கையையும் நிர்வாகத்திடம் கொண்டுசெல்கிறேன். அந்த விஷயத்தில் என்னால் தீர்வுகூற இயலாது. இந்தப் பிரச்னைகளைப் பற்றி நீங்கள் ஆலையிலேயே முறையிட்டிருக்கலாம். இது பெரிய பிரச்னையாகி, மீடியா வரை போகவேண்டிய அவசியமில்லை. யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காக இந்த அலுவலகம் இல்லை. அனைவருக்கும் அனைத்து தேவைகளையும் செய்து தரணும் என்பதற்காகத்தான் இந்த அலுவலகம் உள்ளது” என்றார்.

விகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை!

அப்போது ஒரு விவசாயி, ``வெள்ளைக் கரும்புகளை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்... சிவப்புக் கரும்பை மட்டும் ஏன் பயிரிடச் சொல்கிறீர்கள்” என்று கேட்க, ``வெள்ளைக் கரும்புகளில் அதிக நோய்த் தாக்குதல் நடக்கிறது. மற்ற இடங்களுக்கும் எளிதாகப் பரவுகிறது. பல இடங்களில் அந்தப் பிரச்னை இருக்கு. அதனால், பாதிப்பு இல்லாத ரகத்தைப் பயிரிடும்படி கூறுகிறோம். வேண்டுமானால் மாதிரியை உங்கள் காட்சிக்கு வைக்கச்சொல்கிறேன் பாருங்கள். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார்.
   

Vikatan