Published:Updated:

`நாங்கள் சொந்தக்காலில் நிற்கணும்!' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்

இரா.கோசிமின்
`நாங்கள் சொந்தக்காலில் நிற்கணும்!' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்
`நாங்கள் சொந்தக்காலில் நிற்கணும்!' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்

சொந்தமாகத் தொழில் தொடங்கவும் விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடவும் வங்கிகள் கடனுதவி வழங்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் முதியோர் முன்னேற்ற கூட்டமைப்பை சேர்ந்த முதியவர்கள் சுமார் 500 பேர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

`நாங்கள் சொந்தக்காலில் நிற்கணும்!' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்

இதுகுறித்து அந்த அமைப்பின் மேலாளர் தர்மலிங்கத்திடம் கேட்டபோது, ``சேமிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கும், கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடலூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதியோர் குழுக்களுக்கு நபார்டு மூலம் வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்தக் கடன், வயதானவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யவும், விவசாயத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கவும் பயன்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் ஆமத்தூர், ரெட்டியபட்டி, தொட்டியங்குளம், வச்சக்காரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 120 முதியோர் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.

`நாங்கள் சொந்தக்காலில் நிற்கணும்!' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்

வயதானவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும். அடுத்தவரை நம்பி இருக்கக் கூடாது என நினைத்தாலும் பொருளாதார ரீதியான பிரச்னைகள் உள்ளன. எனவே, வங்கிகளை அணுகினாலும் பெரும்பாலான வங்கிகள் வயதானவர்கள் என்பதைக் காரணம் காட்டி கடன் வழங்க மறுக்கின்றன. இதனால் முதியோருக்குத் தேவையான நிதி கிடைப்பதில்லை. இறுதிவரை அடுத்தவர்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, முதியவர்களுக்கும் கடனுதவி வழங்க வேண்டும்.

`நாங்கள் சொந்தக்காலில் நிற்கணும்!' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்

அதேபோல, ஆதரவற்ற முதியோருக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.2,000 உதவித்தொகை வழங்க கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

Vikatan