Published:Updated:

`நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது ஏன்?’ - பாண்டவர் அணி கேள்வி

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்
`நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது ஏன்?’ - பாண்டவர் அணி கேள்வி
`நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது ஏன்?’ - பாண்டவர் அணி கேள்வி

``நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை மறுப்பது ஏன்... இதன் பின்னணியில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்” எனப் பாண்டவர் அணியினைச் சேர்ந்த நடிகர் நாசர் மற்றும் பூச்சி முருகன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

`நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது ஏன்?’ - பாண்டவர் அணி கேள்வி

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணியினர் மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர்கள் நாசர், பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்ட பலரும் புதுக்கோட்டை வந்தனர். முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்துக்குச் சென்றவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நாடக நடிகர்களைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

`நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது ஏன்?’ - பாண்டவர் அணி கேள்வி

நாசர் மற்றும் பூச்சி முருகன் கூட்டாக அளித்த பேட்டி,  ``எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்த முடியாது என்பதால், சங்க கட்டடத்தை கட்டி முடிக்கவில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எதிர் அணியினர் மாறி, மாறி குற்றம் சாட்டுகின்றனர். அதில் உண்மை இல்லை. 75 சதவிகித சங்க கட்டடப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கொடுத்த 90 சதவிகித வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்கம் நாடக நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்துத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட உள்ளோம். ஏற்கெனவே, நடிகர் கமலஹாசனைச் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். இதேபோல், விரைவில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் இடத்துக்கு 1800 பேர் தான் வாக்களிக்க வருவார்கள். இங்கு 3 முறை எம்.ஜி.ஆர் பொதுக்குழு நடத்தியுள்ளார். அதில், 3,500 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

`நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது ஏன்?’ - பாண்டவர் அணி கேள்வி

கடந்த மாதம் ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா இங்கு நடந்திருக்கிறது. அதில் 7,000 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர். அப்போதெல்லாம் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த முறை நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கக் காவல்துறை மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சட்டப்படி நீதிமன்றத்துக்குச் சென்று தீர்வு காண்போம். திட்டமிட்டபடி நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும்" என்றனர்.