Published:Updated:

`திட்டமிட்டபடி 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும்!’ - கருணாஸ் எம்.எல்.ஏ

மணிமாறன்.இரா
`திட்டமிட்டபடி 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும்!’ - கருணாஸ் எம்.எல்.ஏ
`திட்டமிட்டபடி 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும்!’ - கருணாஸ் எம்.எல்.ஏ

``தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நடைபெறும்'' என கருணாஸ் எம்.எல்.ஏ திட்டவட்டமாகக் கூறினார்.

`திட்டமிட்டபடி 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும்!’ - கருணாஸ் எம்.எல்.ஏ

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் 2019-ல் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், நடிகர் சங்கத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணிக்கு ஆதரவாகப் புதுக்கோட்டை நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டினர்.

`திட்டமிட்டபடி 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும்!’ - கருணாஸ் எம்.எல்.ஏ

அப்போது, நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ராதாரவி, தன் தந்தையைப் பழி வாங்கிவிட்டதாகக் கூறி ஐசரி கணேஷ் முன்பு பாண்டவர் அணிக்கு ஆதரவு கொடுத்தார். பாண்டவர் அணியினருடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், தான் தற்போது ராதாரவியுடன் சேர்ந்துகொண்டு அந்த அணிக்கு ஆதரவாக வாக்குக் கேட்கிறார். ஐசரி கணேஷ் 25-க்கும் அதிகமான கல்லூரிகளை வைத்துக்கொண்டு நடிகர் சங்க உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்துவருகிறார். ராதாரவி தேர்தலில் போட்டியிடவில்லை. சங்கத்தில் இல்லை... ஆனால், ஐசரி கணேஷுக்கு பின்புலமாக இருக்கிறார்.

நாடக நடிகர்களைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பரிந்துரை செய்வோம். அதை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள். கடந்த சில வருடங்களில் ஏராளமான நாடகக் கலைஞர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காமல், விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதால்தான், தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சில உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் வேறு தனிப்பட்ட காரணம் ஏதும் கிடையாது. திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.