Published:Updated:

`அழகிய கண்மாய் விற்பனைக்கு..!' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை

செ.சல்மான் பாரிஸ்
`அழகிய கண்மாய் விற்பனைக்கு..!' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை
`அழகிய கண்மாய் விற்பனைக்கு..!' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை
`அழகிய கண்மாய் விற்பனைக்கு..!' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை

கண்மாய் விற்பனைக்கு என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரை மாநகரெங்கும் பரபரத்துக் கிடக்கிறது. அதில், `ஓர் அரிய வாய்ப்பு.... அழகிய கண்மாய் விற்பனைக்கு... வீடு கட்டி உடனே குடியேறலாம். மறு விற்பனை மூலம் கோடி ரூபாய் லாபம் பெறலாம். முதலில் வரும் சொந்த வீடு இல்லாத 100 ஏழைகளுக்கு 2 சென்ட் இலவசம்' என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

`அழகிய கண்மாய் விற்பனைக்கு..!' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை


இந்த போஸ்டரை ஒட்டியுள்ள பி.ஜே.பி இளைஞரணி மதுரை கோட்டப் பொறுப்பாளர் சங்கர்பாண்டியிடம் பேசினோம், ``மதுரை அருகே வளர்ந்து வரும் பகுதியான ஊமச்சிக்குளம் அருகிலுள்ள இடந்தகுளம், அம்மன் குளம் கண்மாய்களை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு வருவதைப்பற்றி கடந்த ஒரு வருடமாக புகார் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அந்தப்பகுதியில் வீட்டு மனை விலை பல லட்சத்துக்குப் போகிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்களை பிளாட் போட்டு விற்றால் எட்டு கோடிக்கு மேல் வரும். தற்போது கண்மாயை சீர்படுத்தி சமதளமாக்கி விட்டார்கள். அங்கு கண்மாய் இருந்த சுவடே இல்லை. அதனால்தான் இப்படி போஸ்டர் அடித்தேன்.

`அழகிய கண்மாய் விற்பனைக்கு..!' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை

வருகிற கிராமசபைக் கூட்டத்தில் வீடில்லாத ஏழை மக்கள் வந்து குடியேறுங்கள் என்று அறிவிக்கப்போகிறேன். யாரோ ஒரு தனிநபர் சொந்தம் கொண்டாடுவதைவிட ஏழை எளிய மக்களாவது அதில் குடியேறட்டும். அப்போது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்'' என்றார். தண்ணீர் பஞ்சம் தமிழக மக்களை வாட்டி வதைக்கும்போது, நீர்நிலைகள் எப்படியெல்லாம் விலை போகிறது என்பதற்கு இந்த போஸ்டர் ஓர் உதாரணம். 

Vikatan