Published:Updated:

கடப்பாரையைப் பயன்படுத்தி திருட்டு - ஒரே நாளில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்!

ரா.சதீஸ்குமார்
கடப்பாரையைப் பயன்படுத்தி திருட்டு - ஒரே நாளில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்!
கடப்பாரையைப் பயன்படுத்தி திருட்டு - ஒரே நாளில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடிச் சென்றவர்களை கண்காணிப்பு  கேமரா உதவியுடன் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கடப்பாரையைப் பயன்படுத்தி திருட்டு - ஒரே நாளில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்!

கோத்தகிரி கடை வீதி பகுதியில் அரசின் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு  கடையில் விற்பனை முடித்து விட்டு மேலாளர் மனோஜ் விற்பனையான தொகையான 30,660 ரூபாயை அடுத்த நாள் விற்பனையுடன் சேர்ப்பதற்காக டாஸ்மாக் கடையில் வைத்து கடையை பூட்டி விட்டு சென்றார். காலை 9 மணிக்கு கடையைச் சுத்தம் செய்வதற்கு ஊழியர்கள் வந்துள்ளனர் அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைந்து தொங்குவதையும் மதுபாட்டில்கள்  வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதயைும் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து கோத்தகிரி போலீஸார் ஆய்வு நடத்தினர். மேலும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவி்ல் பதிவான காட்சிகளை கைபற்றியும் ஆய்வு செய்தனர்.

கடப்பாரையைப் பயன்படுத்தி திருட்டு - ஒரே நாளில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்!

அதில் நள்ளிரவு 11 மணியளவில் துணியால் முகத்தை மறைத்தபடி மர்மநபர்கள் இருவர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து கடையின் முன் பக்கம் இருந்த கண்காணிப்பு கேமராவை கல்லால் உடைப்பதும் அதிகாலை 2 மணிக்கு கடப்பாரையைப் பயன்படுத்தி அந்த வழியாக பாருக்குள் நுழைவதும் பதிவாகியிருந்தது. பின்னர் பார் அறையிலிருந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்து இரண்டு பைகளில் மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வதும் கேமராவில் பதிவாகியிருந்தது.

கடப்பாரையைப் பயன்படுத்தி திருட்டு - ஒரே நாளில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்!

,

இதற்கிடையில் நடந்த தீவிர விசாரணையில், டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள தேவாரம் காட்டேஜ் பகுதியில்  உள்ள வீட்டில் பதுங்கி இருந்த இளைஞர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் டாஸ்மாக் கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.  இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய நபர்கள் கோபிநாத் மற்றும் ராஜா என்பது  தெரிய வந்தது. தொடர்ந்து கடையின் மேலாளர் மனோஜ் அளித்திருந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.