Published:Updated:

`மருத்துவமனையில் மார்ட்டின்.. பழனி மரணம் பேரிழப்பு!' - லீமா ரோஸ்

குருபிரசாத்
`மருத்துவமனையில் மார்ட்டின்.. பழனி மரணம் பேரிழப்பு!' - லீமா ரோஸ்
`மருத்துவமனையில் மார்ட்டின்.. பழனி மரணம் பேரிழப்பு!' - லீமா ரோஸ்

லாட்டரி மார்ட்டின் ஊழியர் பழனிச்சாமி மறைவுக்கு, மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

`மருத்துவமனையில் மார்ட்டின்.. பழனி மரணம் பேரிழப்பு!' - லீமா ரோஸ்

கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, மார்ட்டின் நிறுவனத்தில் காசளாராக பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவரது சடலம், நேற்று முன் தினம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு் குட்டையில் இருந்து மீட்கப்பட்டது.

"வருமானவரித்துறை அதிகாரிகள் எனது அப்பாவை தகாத வார்த்தைகளில் திட்டியும், அடித்தும் மன உளைச்சல் ஏற்படுத்தினர். அதனால் தான் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இயற்கையானது அல்ல" என்று பழனிச்சாமி மகன் ரோகின் குமார் புகார் எழுப்பினார். இதுதொடர்பாக, காரமடை போலீஸார் வருமானவரித்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

`மருத்துவமனையில் மார்ட்டின்.. பழனி மரணம் பேரிழப்பு!' - லீமா ரோஸ்

இதுதொடர்பாக மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அளித்துள்ள விளக்கத்தில், "பழனிச்சாமியின் மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் எங்களுக்கு பேரிழப்பு. வருமானவரித்துறையினர் கொடுத்த மன உளைச்சலில் தான் பழனிச்சாமி உயிரிழந்ததாக  காரமடை போலீஸார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர் மூலமாக தெரியவந்துள்ளது.  மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி பழனிச்சாமி மரணத்துக்கான காரணத்தை  வெளிகொண்டு வரவேண்டும். உடல்நலக் குறைபாடு காரணமாக மார்ட்டின் கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழனிச்சாமியின் மரண செய்தி கேட்டு மார்ட்டினும் வேதனையடைந்தார்.

`மருத்துவமனையில் மார்ட்டின்.. பழனி மரணம் பேரிழப்பு!' - லீமா ரோஸ்

பழனிச்சாமி குடும்பத்துக்கு உறுதுணையோடும், ஒத்துழைப்போடும் இருப்போம். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.