Published:Updated:

`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்!

சிந்து ஆர்
`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்!
`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்!

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் பெண் போலீஸ் அதிகாரியை நடு ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தவர் போலீஸ்காரர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராகப் பணிபுரிந்து வந்தவர் சௌமியா (31). இன்று மாலை பணி முடிந்து பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு கார் சௌமியாவின் பின்பக்கம் வேகமாக வந்து மோதியது. கீழே விழுந்த சௌமியா எழுந்து ஓட முயன்றார். காரில் இருந்து இறங்கிய இளைஞர் வேகமாகச் சென்று சௌமியாவை அரிவாளால் வெட்டி வீழ்த்தினார். கீழே விழுந்தவர் எழுந்து நிற்க முயன்றபோது அந்த இளைஞர் கேனில் எடுத்துச் சென்ற பெட்ரோலை சௌமியா மீது ஊற்றி தீவைத்து எரித்தார். சௌமியாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். இதனால் அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றார். பொதுமக்கள் அவரைப் பிடித்தனர்.

`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்!

அப்போது இளைஞரின் உடலிலும் தீக்காயம் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சௌமியாவின் கணவர் புஷ்கரன் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் பெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொலைசெய்தவர் ஆலுவா போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் அஜாஸ் (33) என்பது தெரியவந்துள்ளது. அஜாசுக்கும் தீக்காயம் ஏற்பட்டதால் அவரைக் கைது செய்த போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பெண் போலீஸ் அதிகாரி நடுரோட்டில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan