Published:Updated:

சோதனையில் நிற்கவில்லை; ல‌த்தியால் அடித்த போலீஸ்- பறிபோன இளைஞரின் உயிர்

அருண் சின்னதுரை
வி.சதிஷ்குமார்
சோதனையில் நிற்கவில்லை; ல‌த்தியால் அடித்த போலீஸ்- பறிபோன இளைஞரின் உயிர்
சோதனையில் நிற்கவில்லை; ல‌த்தியால் அடித்த போலீஸ்- பறிபோன இளைஞரின் உயிர்

மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோதனையில் நிற்கவில்லை; ல‌த்தியால் அடித்த போலீஸ்- பறிபோன இளைஞரின் உயிர்

மதுரை சிம்மக்கல் பகுதியில் டயர் வியாபாரம் செய்துவருகிறார் விவேகானந்தகுமார் (38). இவர் நேற்று இரவு மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு எம்.ஜி.ஆர் பாலத்தின் அருகில் சென்றபோது செல்லூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர  வாகனத்தை நிறுத்தாமல் சென்ற விவேகானந்தகுமாரையும் அவர் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரையும் பலமாக லத்தியால் தாக்கியுள்ளனர் போலீஸார். அப்போது விவேகானந்தகுமாருக்கு காதில் ரத்தம் வழிந்து மயங்கி கீழே விழுந்தார். அதனால் உடனடியாக இராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு 2 வயது குழந்தை உள்ளது. இறந்த விவேகானந்தகுமாரின் உறவினர்கள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Vikatan