Published:Updated:

`என் காதலனை சிறைக்கு அனுப்பாதீங்க!'- போலீஸாரிடம் கதறிய 17 வயது சிறுமி

எஸ்.மகேஷ்
`என் காதலனை சிறைக்கு அனுப்பாதீங்க!'- போலீஸாரிடம் கதறிய 17 வயது சிறுமி
`என் காதலனை சிறைக்கு அனுப்பாதீங்க!'- போலீஸாரிடம் கதறிய 17 வயது சிறுமி

சிறுமியிடம் நெருங்கிப் பழகிய தனியார் நிறுவன ஊழியர், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். சென்னை வேளச்சேரியில் நடந்த இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

`என் காதலனை சிறைக்கு அனுப்பாதீங்க!'- போலீஸாரிடம் கதறிய 17 வயது சிறுமி

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்துக்கு 17 வயது மகளுடன் பெற்றோர் வந்தனர். அவர்கள், கண்ணீர்மல்க புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், ``எங்கள்  மகளுக்கு 17 வயதாகுகிறது. அவர், பள்ளியில் படித்துவருகிறார். எங்கள் மகளை யுவராஜ் என்ற வாலிபர் நம்பவைத்து ஏமாற்றிவிட்டார். அவர்மீது நடவடிக்கை எடுங்கள்'' என்று கூறினர். 

இதையடுத்து வேளச்சேரி போலீஸார் யுவராஜிடம் விசாரித்தனர். அப்போதுதான் மாணவிக்கும் யுவராஜுக்கும் உள்ள பழக்கம் போலீஸாருக்குத் தெரியவந்தது. மாணவியைக் காதலித்து ஏமாற்றியதற்காக யுவராஜை போலீஸார் கைதுசெய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவிக்கும் யுவராஜுக்கும் ஒரே பகுதி என்பதால், இருவரும் சில ஆண்டுகளாக நட்பாகப் பழகியுள்ளனர். 17 வயது மாணவியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, யுவராஜ் நெருங்கிப் பழகியுள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். அதை அந்தச் சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் மறைத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில், சிறுமியின் பெற்றோருக்கு கர்ப்பம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அப்போதுதான் யுவராஜ் குறித்த விவரங்களை சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் எங்களிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் யுவராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். இவர், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறார்" என்றனர். 
 
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``யுவராஜிடம் முதலில் விசாரித்தபோது அவர் உண்மையை ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பிறகு, பெண் போலீஸார் மூலம் சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தோம். அப்போது, அந்தச் சிறுமி முழுவிவரத்தையும் எங்களிடம் தெரிவித்தார். அதன்பிறகு, சிறுமியுடன் யுவராஜ் பழகியதற்கான ஆதாரங்களை அவரிடம் காண்பித்தபோது, உண்மையை ஒத்துக்கொண்டார். அதன்பிறகு, சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அப்போது, சட்டப்படி சிறுமியை திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று கூறினோம். சிறுமியும் யுவராஜை திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தார். அவருக்கு கவுன்சலிங் அளித்துள்ளோம். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்படுவது அதிகரித்துவருகின்றன" என்றார். 

`என் காதலனை சிறைக்கு அனுப்பாதீங்க!'- போலீஸாரிடம் கதறிய 17 வயது சிறுமி

சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது, ``ஒரே பகுதி என்பதால் முதலில் அண்ணன் தங்கையாகத்தான் பழகினோம். போனில் அடிக்கடி பேசுவோம். நாளடைவில் யுவராஜின் நடவடிக்கைகள் எனக்குப்பிடித்தது. முதலில் அவர்தான் காதலைச் சொன்னார். அதை நானும் ஏற்றுக்கொண்டேன். நாங்கள் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் பல இடங்களுக்குச் சென்றுள்ளோம். அப்போது, என்னை திருமணம் செய்துகொள்வதாக யுவராஜ் கூறினார். அவரை முழுமையாக நம்பினேன். நான் கர்ப்பமான தகவலை யுவராஜிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை சமாதானப்படுத்தியதோடு, திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்தச் சமயத்தில், வீட்டுக்கு எங்களின் காதல் விவரம் தெரிந்துவிட்டது. யுவராஜை என்னால் மறக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார். 

சிறுமிக்கும் அவரின் பெற்றோருக்கும் போலீஸார் அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளனர். யுவராஜை கைதுசெய்ய வேண்டாம் என்று விசாரணை அதிகாரிகளுக்கு சில இடங்களிலிருந்து சிபாரிசு வந்துள்ளது. ஆனால், அதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், யுவராஜை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

`என் காதலனை சிறைக்கு அனுப்பாதீங்க!'- போலீஸாரிடம் கதறிய 17 வயது சிறுமி


 
வேளச்சேரி காவல் நிலையத்தில் நடந்த காதல் போராட்டத்துக்கு போலீஸார் சிரமப்பட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சிறுமியிடம், உங்கள் இருவரின் காதலையும் ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடம் இல்லை என்று புரியும்படி விளக்கிக் கூறினர். சிறுமியின் பெற்றோரும் புத்திமதி கூறினர். இருப்பினும், சிறுமி சமாதான ஆகவில்லை'' என்று போலீஸார் தெரிவித்தனர்.  

Vikatan