Published:Updated:

`நாலு ஏலு ஐ.சி.எஃப் ரூட்டுதான் வாலு' - முதல்நாள் கொண்டாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் 

எஸ்.மகேஷ்
`நாலு ஏலு ஐ.சி.எஃப் ரூட்டுதான் வாலு' - முதல்நாள் கொண்டாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் 
`நாலு ஏலு ஐ.சி.எஃப் ரூட்டுதான் வாலு' - முதல்நாள் கொண்டாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் 

விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் செய்த ரகளையால் பயணிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தனர். 

`நாலு ஏலு ஐ.சி.எஃப் ரூட்டுதான் வாலு' - முதல்நாள் கொண்டாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் 

விடுமுறை முடிந்து இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல்நாள் என்பதால், மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிந்த போலீஸார், கல்லூரிகள் முன் பாதுகாப்புக்காக போலீஸாரை பணியமர்த்தியிருந்தனர். இந்த நிலையில், சென்னைக் கல்லூரி மாணவர்களுக்கிடையே ரூட் தல பிரச்னை நீண்ட காலமாக தலைதூக்கிவருகிறது. அதைத் தடுக்கவும், போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். 

முதல்நாள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை சார்பில்  ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில், ``1.கோடை விடுமுறை முடித்து புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்துவைக்கும் கல்லூரி மாணவர்களுக்கு, சென்னை மாநகர காவல் துறையின் வரவேற்பு மற்றும் நல்வாழ்த்துகள். 

2. தங்களது எதிர்காலம் வளமாக அமையவேண்டிய படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தவும் 
3. மாணவர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால், வருங்காலத்தில் உயர்கல்வி பயிலுதல் அரசு மற்றும் தனியார் பணிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். எனவே, அவ்வாறான செயல்களைத் தவிர்க்கவும்.

4.கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு கல்லூரி முதல்வரிடமோ காவல்துறையினரிடமோ முறையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

5.மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய காவல்துறையின் சார்பாக மீண்டும் வாழ்த்துகள். காவல்துறை உங்கள் நண்பன் " என்று கூறப்பட்டுள்ளது. 

`நாலு ஏலு ஐ.சி.எஃப் ரூட்டுதான் வாலு' - முதல்நாள் கொண்டாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் 

இந்த நிலையில், காவல்துறையின் அறிவிப்பையும் மீறி சில இடங்களில் பஸ்ஸின் மேற்கூரைமீது ஏறி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரிக்கு 47 ஏ என்ற வழித்தட அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸில் வந்த மாணவர்கள், கல்லூரியின் பெயரைக் கொண்ட பேனர்களை வைத்திருந்தனர். அதில், `நாலு ஏலு ஐ.சி.எஃப் ரூட்டுதான் வாலு' என்ற வாசகத்தை குறிப்பிட்டிருந்தனர். அந்த மாணவர்களை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. 

சென்னை வானிலை மையம், இன்று அனல் காற்று வீசும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று பல இடங்களில் அனல் காற்று வீசினாலும் அதைப் பொருட்படுத்தாமல், மாணவர்கள் கல்லூரி திறப்பு விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். போலீஸாரின் கண்களில் சிக்கிய மாணவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. மாணவர்களின் இத்தகைய செயல்களால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கல்லூரி திறப்பையொட்டி சென்னையில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் பஸ்ஸின் மேற்கூரையில் ஏறிய மாணவர்கள் ஆட்டம் போட்டனர். அவர்களை நாங்கள் பிடித்துள்ளோம். மாணவர்களின் இந்தச் செயல்கள் வீடியோவாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர்களின் பெற்றோருக்கும் அவர்கள் பயிலும் கல்லூரிக்கும் தகவல் தெரிவிக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என பலமுறை எச்சரித்துள்ளோம். மாணவர்கள் பஸ்ஸில் வைத்திருந்த பேனர்கள், பூ மாலைகளைப் பறிமுதல்செய்துள்ளோம். பஸ்ஸுக்குப் பின்னால் அதிவேமாக பைக்குகளில் சென்ற மாணவர்களையும்  பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.   

Vikatan