Published:Updated:

சிக்கும் தங்கக்கட்டிகள்... அதிரவைக்கும் கரன்சி நோட்டுகள் - பரபரக்கும் திருச்சி விமானநிலையம்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்
சிக்கும் தங்கக்கட்டிகள்... அதிரவைக்கும் கரன்சி நோட்டுகள் - பரபரக்கும் திருச்சி விமானநிலையம்
சிக்கும் தங்கக்கட்டிகள்... அதிரவைக்கும் கரன்சி நோட்டுகள் - பரபரக்கும் திருச்சி விமானநிலையம்
திருச்சி விமான நிலையத்தில், கடந்த சில மாதங்களாக கடத்தல் தங்கம்  மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்வது தொடர்கிறது.
சிக்கும் தங்கக்கட்டிகள்... அதிரவைக்கும் கரன்சி நோட்டுகள் - பரபரக்கும் திருச்சி விமானநிலையம்
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி விமானநிலையத்திற்கு, நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்தவண்ணம் உள்ளது. அதே அளவிற்கு கடத்தல் தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்படுவதால், அவ்வப்போது திருச்சி விமான நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது .
20 லட்சம் ரூபாய்  வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
இன்று, திருச்சியில்  இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த  ஏர் ஏசியா  விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த அலி அப்பாஸ் என்பவர், தனது சூட்கேஸில் மறைத்து எடுத்துவந்த 19 லட்சத்து 82 ஆயிரத்து 709 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் சவுதி ரியால், யூரோ, ஜப்பான் என்,  ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர்,  சுவிஸ் ஃப்ராங்க் என 374 நோட்டுகள் இருந்தன. அந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகளைப் பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிக்கும் தங்கக்கட்டிகள்... அதிரவைக்கும் கரன்சி நோட்டுகள் - பரபரக்கும் திருச்சி விமானநிலையம்
சிக்கிய தங்கக்கட்டிகள் 
வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை  விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைசெய்தனர். 
அப்போது,  தொண்டியைச் சேர்ந்த  முகமது ரபீக்,  முகமது ரியாஸ் அலி மற்றும் எஸ். பி. பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஹசீர்,  முகமது முஸ்தபா ஆகியோர் அவர்களின் உடலில் ஆசனவாயில் மறைத்து  37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1100 கிராம் தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து,  அவர்கள் கடத்திய தங்கக் கட்டிகளைப் பறிமுதல்செய்த அதிகாரிகள், தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடரும் தங்கக் கடத்தல்
 திருச்சி விமான நிலையத்தில், கடந்த சில வாரங்களாக தங்கக்கட்டிகள் சிக்குவது அதிகரித்துள்ளது. கடந்த 11-ம் தேதி, துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம்செய்த பயணிகளின் உடைமைகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த வினோத் என்பவர், கட்டரில் மறைத்து எடுத்துவந்த ரூபாய் 4.89 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். தங்கக் கடத்தல் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள்  கடத்துவதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.