Published:Updated:

`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா!' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி

இரா.கோசிமின்
`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா!' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி
`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா!' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே போலியாகக் கர்நாடக பதிவெண் கொண்ட கேரள வாகனத்தைச் சோதனை செய்த காவல்துறையினர் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா!' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாற்றில் உள்ள ஒரு கடையிலிருந்து டயரைத் திருடிவிட்டும், அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமலும் 3 பேர் ஒரு சொகுசு வாகனத்தில் தப்பியோடுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி, சாத்தூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் இருந்த ஹைவே போலீஸார் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை விரட்டி வந்தனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே கேட் வந்தபோது கேட் மூடப்பட்டிருந்தது. எனவே, அந்தக் காரில் இருந்து 3 பேர் கீழே இறங்கி தப்பியோடிவிட்டனர். காவல் துறையினர் அந்தக் காரை சோதனை செய்தபோது, அது கேரளா பதிவெண் கொண்ட கார் என்பதும், போலியாக கர்நாடகா பதிவெண் எழுதியிருப்பதும் தெரியவந்தது. காரின் உள்ளே அரை கிலோ எடை கொண்ட சுமார் 1 அடி நீளமுள்ள புதிய துப்பாக்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா!' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி

பின்னர், அந்த கார் மற்றும் துப்பாக்கியை சூலக்கரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கேரளா பதிவெண் கொண்ட கார் எதற்காகக் கர்நாடகா எண்ணாக மாற்றப்பட்டது. இந்த கார் எங்கே இருந்து வந்தது. யார் யார் உள்ளே இருந்தனர். என்ன ரக துப்பாக்கி என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan