Published:Updated:

`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை!’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

லோகேஸ்வரன்.கோ
`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை!’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை!’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

ராணிப்பேட்டையில், 5 வயது மகனை இரண்டாவது கணவருடன் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலைசெய்த தாய், யாருக்கும் தெரியாமல் சடலத்தை பாலாற்றில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை!’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த பாக்குபேட்டை பகுதியைச் சேர்ந்தவர், காவியா. இவருக்கும் ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராஜேந்திரன் என்பவருக்கும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தருண் (5) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகனை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார் காவியா. அதன்பிறகு, கணவருடன் மீண்டும் சேர்ந்துவாழ விரும்பவில்லை.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை காரைப் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் காவியாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகியதால், கடந்த ஜனவரி மாதம் தியாகராஜனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வாலாஜாபேட்டை பெல்லியப்பா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினர். அவர்களுக்கு, மகன் தருண் இடையூறாக இருந்தது தியாகராஜனுக்குப் பிடிக்கவில்லை. அந்தச் சிறுவனை தியாகராஜன் கடுமையாகத் தாக்கி, கொடுமைப்படுத்திவந்திருக்கிறார்.

`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை!’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

இது சம்பந்தமாக, ஏற்கெனவே வாலாஜாபேட்டை போலீஸில் காவியாவின் உறவினர் புகார் அளித்திருந்தனர். போலீஸார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி, தண்ணீர் தொட்டியில் தருணை மூழ்கடித்து தியாகராஜன் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறார். மகனைக் கொலைசெய்ய காவியா உடந்தையாக இருந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து சிறுவனின் சடலத்தை காரில் எடுத்துச்சென்று, ராணிப்பேட்டை அருகில் பாலாற்றில் புதைத்துள்ளனர். பின்னர், இருவரும் ஒன்றும் தெரியாததைப் போல் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

சிறுவனைத் துன்புறுத்தி வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், திடீரென சிறுவன் காணாமல் போனதையறிந்து சந்தேகப்பட்டனர். இதுபற்றி வாலாஜாபேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார், காவியாவையும் தியாகராஜனையும் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், மகனைக் கொன்று புதைத்துவிட்டதாகக் காவியா கூறினார். அதைத்தொடர்ந்து, பாலாற்றுப் பகுதிக்கு காவியாவை முகத்தை மறைத்தபடி போலீஸார் இன்று காலை அழைத்துச்சென்றனர். மகனைப் புதைத்த இடத்தை காவியா அடையாளம் காட்டினார்.

`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை!’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

போலீஸார், சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்தனர். இதுபற்றி தகவலறிந்ததும், பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். சிறுவனின் சடலத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர். விசாரணையில், கைதுசெய்யப்பட்ட தியாகராஜன், திருமணமான பெண்களையும் கணவரைப் பிரிந்துவாழும் பெண்களையும் குறிவைத்து பணம் பறித்துவந்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு, வேறொரு பெண் விவகாரத்தில் போலீஸார் தியாகராஜனைக் கண்டித்து அனுப்பியது தெரியவந்திருக்கிறது. 

மேலும், கொலைசெய்யப்பட்ட சிறுவன் தருணை கடந்த ஏழு மாதங்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். இதையறிந்த காவியாவின் அக்காள், மகனை தன்னிடம் கொடுத்துவிடுமாறு பலமுறை மன்றாடியிருக்கிறார். ஆனால், மகனைக் கொடுக்காமல் தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். சம்பவத்தன்று மது போதையில் இருந்ததால், சிறுவனைக் கொன்றுவிட்டதாக தியாகராஜன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். சிறுவனைக் கொன்ற விவகாரத்தில்,  இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Vikatan